காணி கொள்ளைக்கு எதிரான தேசிய வார நிகழ்வு இன்று –மன்னாரில் அனுஸ்ரிப்பு.பட இணைப்பு.
கிராமம் மற்றும் பிரதேசங்களில் உணவு தன்னாதிக்கத்தை பாதுகாப்பதற்காக பூமி,நீர் மற்றும் விதைகளுக்கான மக்கள் உரிமையை உறுதிப்படுத்துக.காணி கொள்ளைக்கு எதிரான தேசிய வாரம் கடந்த செவ்வாய்ககிழமை முதல் மன்னார் மாவட்டத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையினால் அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தேசிய வார நிகழ்வுகள் இன்று மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில் அமைந்துள்ள ஞானோதய மண்டபத்தில் தேசிய ஒத்துளைப்பு பேரவையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எஸ்.சுனேஸ் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வுகள் மாவட்ட மட்டத்திலும்,தேசிய மட்டத்திலும்,உலகலாவிய ரீதியிலும் அணுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது.
-இந்த நிலையில் 9 ஆம்,10 ஆம் திகதிகளில் கிராம மட்டத்தில் உள்ள அமைப்புக்களுடன் கலந்துரையாடல் இடம் பெற்றது. இன்று வியாழக்கிழமை 11 ஆம் திகதி மாவட்ட மட்டத்திலான கலந்துரையாடல் மற்றும் ஊடகவியலாளர்களுக்காண மகாநாடும் மன்னார் ஞானோதயத்தில் இடம் பெற்றது.
இதன் போது பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை கலந்து கொண்டார்.இதே வேளை தேசிய மீனவ ஒத்துளைப்பு பேரவையின் வட கிழக்கு மாகாண இணைப்பாளரும்,பொது இணைப்பாளருமான என்டனி ஜேசுதாஸன்,பிரஜா அபிலாசை வலையமைப்பின் தேசிய இணைப்பாளர் பிரான்சிஸ் ராஜன்,மன்னார் பிரஜைகள் குழவின் தலைவர் அருட்தந்தை செபமாலை ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதன் போது இடம் பெயர்ந்த நிலையில் பாதீக்கப்பட்டு வரும் முள்ளிக்குளம்,பேசாலை 50 வீட்டுத்திட்டம்,பள்ளிமுனை 25 வீட்டுத்திட்டம் ஆகிய கிராம மக்களின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டு தமது மீள் குடியேற்றம் உற்பட சகல பிரச்சினைகளையும் முன் வைத்தனர்.இதே வேளை காணமல் போன,கடத்தப்பட்டவர்களின் உரவினர்களும் கலந்து கொண்டு தமது பிரச்சினைகளை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.
காணி கொள்ளைக்கு எதிரான தேசிய வார நிகழ்வு இன்று –மன்னாரில் அனுஸ்ரிப்பு.பட இணைப்பு.
Reviewed by NEWMANNAR
on
October 11, 2012
Rating:
No comments:
Post a Comment