தமிழீழ விடுதலைப் புலிகளை அரசு அழித்து விட்டாலும் கூட புலிகளின் சிந்தனைகள் இன்னும் அழியாது இருக்கின்றன. புலிகளை அழித்துவிட்டால் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்றார்கள். ஆனால் இனப்பிரச்சினை தொடர்ந்தும் இருக்கிறது.
பிரச்சினைகளை ஆராயாது விட்டால் பிரச்சினைகளைத் தீர்த்து விடமுடியாது. இவ்வாறு யாழ். கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத் தலைவர் றமீஸ் தெரிவித்தார். வடபகுதியில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவை ஒட்டி யாழ். ஒஸ்மானியாக் கல்லூரியில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே றமீஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:
1990ஆம் ஆண்டு 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் முஸ்லிம் மக்கள் தென்பகுதிக்குச் சென்று குடியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
எங்கள் இடப்பெயர்வுக்குப் புலிகள் தான் காரணம் என நாம் நினைத்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் புலிகள் அழிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் 3ஆயிரம் குடும்பங்கள் வாழும் பிரதேசத்தில் 300 குடும்பங்களே வாழ்கின்றன.
2003 ஆம் ஆண்டு ஒஸ்மானியாக் கல்லூரி திறக்கப்பட்டது. அப்போது 55 குடும்பங்கள் மாத்திரமே மீள்குடியேற்றப்பட்டன. என்றார்.
No comments:
Post a Comment