தன்னை முற்றாக விடுதலை செய்யக்கோரி ரிசாத்பதியூதீன் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது
நீதிமன்றத்தை அவமதித்த சம்பவம் தொடர்பாக தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருந்து தன்னை முற்றாக விடுதலை செய்யுமாறு கோரி, அமைச்சர் ரிசாத் பதியூதீன் இன்று உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சட்டத்தரணிகள் சிலர், அமைச்சருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இதற்கு எதிராக அமைச்சர் பதியூதீன் தாக்கல் செய்த அடிப்படை எதிர்ப்பு மனு நிராகரிக்கப்பட்டதுடன், எதிர்வரும் பெப்ரவரி மாதம் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்வதென நீதிமன்றம் தீர்மானித்தது.
இந்த தீர்ப்பை இரத்துச் செய்து, வழக்கை விசாரணைக்கு எடுக்காது, தாம் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் இருந்து தன்னை விடுதலை செய்யுமாறு அமைச்சர் உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தன்னை முற்றாக விடுதலை செய்யக்கோரி ரிசாத்பதியூதீன் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது
Reviewed by NEWMANNAR
on
October 16, 2012
Rating:

No comments:
Post a Comment