மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழையின் காரணமாக 2720 குடும்பங்கள் பாதிப்பு.
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழையின் காரணமாக 2720 குடும்பங்களைச் சேர்ந்த 9030 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸ் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக காற்றுடன் கூடிய மழை பெய்து வந்தமையினாலேயே குறித்த குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளனர். இதே நேரம் 10 வீடுகள் முழுமையாக பாதிப்படைந்துள்ளது.
அதில் 5 வீடுகள் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் ஏனைய 5 வீடுகள் மடு உதவி அரச அதிபர் பிரிவிலும் முழுமையாக பாதிப்படைந்துள்ளது.
43 வீடுகள் பகுதியளவில் பாதிப்படைந்துள்ளதாகவும் அதில் 36 வீடுகள் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவிலும்,எனைய 7 வீடுகளும் மடு உதவி அரச அதிபர் பிரிவிலும் பாதிப்படைந்துள்ளதாக மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் தெரிவித்தார்.
தற்போது பாதிக்கப்பட்ட மக்களிள் தமது வீடுகளிலும் ஏனையோர் உறவினர்களின் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். பாதிப்புக்கள் குறித்து ஒவ்வொரு பிரதேச செயலகமும் தகவல்களை திரட்டி வருகின்றதாகவும் தேவைப்படின் உடனடியாக நிவாரணங்களும் வழங்கப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸ் தெரிவித்தார்.

Reviewed by NEWMANNAR
on
November 03, 2012
Rating:

No comments:
Post a Comment