அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதியாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு

 யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


சனிக்கிழமை (21) முதல் தொடர்ந்து வரும் மூன்று வருடங்களுக்குச் செயற்படும் வகையில் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா கலைப் பீட சபையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.



வாக்கெடுப்பு

முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் சி.இரகுராமின் பதவிக் காலம் கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்த போதிலும், இலங்கை பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் காரணமாக - திருத்தச் சட்டம் செயற்பாட்டுக்கு வரும் வரையில் பல்கலைக்கழகங்களில் பீடாதிபதி தெரிவுகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.



1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் திருத்தம் 2026 /2 கடந்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என பல்கலைக்கழக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கலைப் பீடாதிபதி தெரிவுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு, பீடாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.


இன்றைய தெரிவின்போது, கலைப் பீட சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா 27 மேலதிக வாக்குகளைப் பெற்று பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். 





யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதியாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு Reviewed by Vijithan on March 20, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.