பிரதேச இளைஞர் கழகங்களின் அதிகாரிகளுக்கான மாவட்ட பயிற்சி வேலைத்திட்டம் மன்னாரில் ஆரம்பம்.(படங்கள் இணைப்பு )
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் பிரதேச இளைஞர் கழகங்களின் அதிகாரிகளுக்கான மாவட்ட மட்டத்திலான பயிற்சி வேலைத்திட்டம் ஒன்று இன்று சனிக்கிழமை(17-11-2012) மன்னார் முருங்கன் ம.வி பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த சிந்தனையின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இளைஞர்களுக்கான தலைமைத்துவத்தை மேம்படுத்தி இளைஞர்களை அபிவிருத்தி பணிகளில் ஈடுபடுவதற்காக குறித்த பயிற்சி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாவட்ட பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை ஆரம்பமான குறித்த பயிற்சி வேலைத்திட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி திங்கட்கிழமை(19-11-2012) மாலை வரை மூன்று நாட்கள் இடம் பெறவுள்ளது.
மன்னார்,வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்து 9 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் தலா 5 இளைஞர் கழகங்களின் உறுப்பினர்கள் வீதம் 45 பேர் தெரிவு செய்யப்பட்டு குறித்த பயிற்சி வேலைத்திட்டம் இடம் பெற்று வருகின்றது.
இன்று சனிக்கிழமை இடம் பெற்ற ஆரம்ப நிகழ்வின் போது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாவட்ட பணிப்பாளர் என்.எம்.முனவ்பர்,வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் இணைப்பாளர் அலிக்கான் சரீப்,முருங்கன் மாவட்ட வைத்திய அதிகாரி ஒஸ்மன்,முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கமால் குனவர்த்தனா,பிரதேச இளைஞர் சேவை அதிகாரி டியூக குரூஸ்,மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட அதிகாரி பூலோகராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
பிரதேச இளைஞர் கழகங்களின் அதிகாரிகளுக்கான மாவட்ட பயிற்சி வேலைத்திட்டம் மன்னாரில் ஆரம்பம்.(படங்கள் இணைப்பு )
Reviewed by Admin
on
November 17, 2012
Rating:
No comments:
Post a Comment