அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் -அடம்பன் கள்ளிக்குளம் வீதியில் சிரமங்களை எதிர்கொள்ளும் மக்கள்- கால்வாயைக் கடக்க பாலம் அமைக்கப்படவில்லை

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கள்ளிக்குளம் வீதி நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாததுடன் பாலமும் நிர்மாணிக்கப்படாமையால் இந்த வீதி வழியாகப் பயணிக்கும் மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.


 மன்னார் அடம்பன் பிரதேசத்தின் கள்ளிக்குளம் கிராமத்தில் காணப்படும் விவசாய வீதியானது மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாததுடன் அவ்வீதிக்கான பாலமும் அமைக்கப்படவில்லை. இந்த வீதி கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட விவசாயப்பகுதியின் பயன்பாட்டுக்கு உரியதாகும்.

இப்பகுதியில் ஏறக்குறைய 100 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாயக்காணிகள் வருடந்தோறும் செய்கை பண்ணப்படுகின்றன. நெற்செய்கையின் பொருட்டு பயன்படுத்தப்படும் அனைத்து உழவு இயந்திரங்களும் பாலமின்மையால் கால்வாயின் குறுக்காகவே இறக்கி ஏற்றப்படுகின்றன. இதனால் அந்த இடம் சிதைந்து போய்க் காணப்படுகின்றது.

 அத்துடன் உழவு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து உழவு இயந்திரங்களும் இக்கால்வாயினுள் நிறுத்தியே கழுவப்படுகின்றன. இதனால் கால்வாயின் இரு பகுதிகளும் சேதமடைந்துள்ளதுடன் நீர் விநியோகத்தின் போது நீர் கால்வாயினைக் கடந்து வெளியேறும் நிலையும் தோன்றியுள்ளது. இதனால் கள்ளிக்குளம் கிராமத்தில் நீண்டகாலமாக வசித்து வரும் குடும்பங்கள் போக்குவரத்தில் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன.

இந்த மக்கள் தமது போக்குவரத்துக்கென ரயில் தண்டவாளங்களினால் அமைக்கப்பட்ட மூன்று அடி அகலமான தற்காலிக கடவையையே பயன்படுத்துகின்றனர். இதனூடாக ஓட்டோக்கள் கூடச் செல்ல முடியாத நிலையே காணப்படுகின்றது. இதனால் திடீர் சுகவீனம் அடையும் நோயாளிகளை வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலையில் இங்குள்ள மக்கள் அவலப்பட்டு வருகின்றனர்.

 எனவே இந்த வீதியை உடனடியாகப் புனரமைத்து அதன் கீழ் வரும் பாலத்தையும் அமைத்து தமது போக்குவரத்துச் சிரமங்களை நீக்கித்தருமாறு கள்ளிக்குளம் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மன்னார் -அடம்பன் கள்ளிக்குளம் வீதியில் சிரமங்களை எதிர்கொள்ளும் மக்கள்- கால்வாயைக் கடக்க பாலம் அமைக்கப்படவில்லை Reviewed by NEWMANNAR on November 17, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.