மன்னாரில் சுத்திகரிப்பு பணியாளர்கள் அசமந்த போக்குடன் செயற்படுகின்றனர்- மன்னார் நகர சபையின் செயலாளர்
மன்னாரில் நகர சபையின் சுத்திகரிப்பு பனியாளர்கள் அசமந்தப்போக்குடனும் பொறுப்பற்ற விதத்துடனும் நடந்து கொள்ளுவதினால் பொதுமக்கள் மன்னார் நகர சபை மீது நம்பிக்கையின்மை கொண்டுள்ளதாக மன்னார் நகர சபையின் செயலாளர் வேனாட் குரூஸ் தெரிவித்தார்.
மன்னாரில் அனார்த்த முன்னறிவித்தல் திட்டத்தின் கீழ் அனார்த்த முன்னறிவித்தல் தொடர்பான உயர் மட்டக்கலந்துரையாடல் ஒன்று நேற்று(5-11-2012) திங்கட்கிழமை காலை மன்னார் மாவட்ட செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன் போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தெடர்பில் கருத்து தெரிவித்த மன்னார் நகர சபையின் செயலாளர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,
மன்னாரில் நகர சபையின் சுற்றிகரிப்பு பனியாளர்கள் தற்போது பொறுப்பற்ற விதத்துடன் நடந்து கொள்ளுகின்றனர்.மாதாந்தம் சம்பள பணத்தை பெற்றுக்கொண்டவுடன் நீண்ட நாட்களுக்கு பணிக்கு வராமல் உள்ளனர்.
பல மாதங்கள் கழிந்த நிலையில் வந்து மீண்டும் பணியில் அமர்த்திக்கொள்ளுமாறு கேட்கின்றனர்.சுற்றிகரிப்பு பணிக்காக அவர்களுக்கு வழங்கப்படுகின்ற சுகாதார பொருட்களை ஆங்காங்கே எரிந்து விடுகின்றனர்.
அதனை சில நேரங்களில் நான் எடுத்து உரிய பணியாளர்களிடம் மீண்டும் திருப்பிக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சுற்றிகரிப்பு பணிக்காக வழங்கப்படுகின்ற உபகரணங்கள் பல திரும்பி வருவதில்லை.
மண்வெட்டி,குப்பைவிரான்டி போன்ற உபகரணங்களை சில சுற்றிகரிப்பு பணியாளர்கள் அதனை வாங்கிய கடைகளிலே கொண்டு சென்று மீண்டும் விற்பனை செய்து விடுகின்றார்கள்.
உபகரணங்கள் எங்கே என்று கேட்டால் தெரியாது என்ற பதிலை செல்லுகின்றார்கள்.இதனால் சுற்றிகரிப்பு பணியை தொடர்ந்தும் மேற்கொள்ள முடியாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளதாக மன்னார் நகர சபையின் செயலாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் குறித்த செயலாளரின் கருத்து இடம் பெற்றுக்கொண்டிருந்த சமயம் மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் குருக்கிட்டு குறித்த கருத்து முற்று முழுதாகவும் மன்னார் நகர சபைக்கும்,நகர சபை பணியாளர்கள் மீதும் குற்றம் சுமத்தும் கருத்தாக காணப்படுகின்றது.
மன்னார் நகர சபையின் செயலாளர் விடுகின்ற சில பிரச்சினைகளின் காரணமாகவே இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதாக மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.
மன்னாரில் சுத்திகரிப்பு பணியாளர்கள் அசமந்த போக்குடன் செயற்படுகின்றனர்- மன்னார் நகர சபையின் செயலாளர்
Reviewed by Admin
on
November 06, 2012
Rating:
1 comment:
தயவு செய்து செய்திகளை பிரசுரிக்க முன்பு எழுத்துப்பிழைகளை ஒருமுறைக்கு இருமுறை செவ்வை பார்க்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். தங்கள் செய்திகளில் அனேக எழுத்துப்பிழைகளும், மாற்றப்படாத எழுதத்துருக்களும்(Font Type) காணப்படுகின்றன.
Post a Comment