வெலிக்கடை சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்வு!
வெலிக்கடை சிறைச்சாலை பகுதியில் தொடந்தும் 11 சடலங்கள் வரை மீட்க்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர இன்று நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்தார்.
இதன்படி, இதுவரை 27 மரணங்கள் இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலை கலவரத்தின் போது தப்பிச் சென்ற கைதிகளில் நான்கு பேர் மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்பியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இருவர் தலைமறைவாகியிருந்த சமயம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திரசிறி கஜதீர குறிப்பிட்டார். எனினும், துப்பாக்கிகளை கைப்பற்றிய எந்தவொரு கைதியும் தப்பிச் செல்லவில்லை. அத்துடன் சிறை கைதிகளால் கைப்பற்றப்பட்ட 82 துப்பாக்கிகளில் 5 ஐ தேடும் பணிகள் இன்னமும் இடம்பெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதுதவிர, நேற்று மாலை இடைநிறுத்தப்பட்டிருந்த சிறைக்கைதிகளுக்கான உணவு வழங்கல் நடவடிக்கை இன்று நிலைமை சுமூகமடைந்த பின்னரே மீண்டும் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 33 இந்தியக் கைதிகளும் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது. மோதல் சம்பவத்தின் போது இந்தியக் கைதிகளுக்கு பாதிப்புக்கள் எவையும் ஏற்படவில்லை என்று இந்திய உயர்ஸ்தானிகரம் குறிப்பிட்டுள்ளது.

Reviewed by NEWMANNAR
on
November 10, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment