தென்பகுதி மீனவர்கள் மன்னார் சௌத்பார் கடற்பரப்பை ஆக்கிரமிப்பு-பனங்கட்டிக்கொட்டு மீனவர் கூட்டுறவுச்சங்கம் அரச அதிபருக்கு மகஜர் அனுப்பி வைப்பு-
மன்னார் சௌத்பார் கடற் தொழில் துறையில் தென்பகுதி மீனவர்கள் அத்து மீறி வருகை தந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் மன்னார் மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.எனவே குறித்த மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்துமாறு கோரி மட்டுப்படுத்தப்பட்ட பனங்பட்டிக்கொட்டு மீனவர் கூட்டுறவுச் சங்கம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திரஅவர்களுக்கு நேற்று திங்கட்கிழமை மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
அனுப்பிவைக்கப்பட்ட மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,,,,
-கடந்த மூன்று தசாப்த காலமாக எமது பிரதேசம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தது.இதனால் மீனவர்கள் உடமை,சொத்து,தொழில் அனைத்தையும் இழந்து தள்ளப்பட்டோம்.
-இவ்வாறான நிலையில் கடற்தொழில் செய்வதற்கு விதிக்கப்பட்ட பல்வேறு வகையான பாஸ் நடைமுறைகள்,கட்டுப்பாடுகள்,கெடு பிடிகள் காரணமாக நாம் நிம்மதியாகவும்,சுதந்திரமாகவும் தொழில் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டோம்.
-தென்பகுதி மீனவர்கள் கடந்த காலங்களில் எமது பகுதிக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வந்தார்கள்.அவர்களுக்கு கடற்தொழில் பாஸ் நடைமுறையில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.எமது மீனவர்களுக்கு அதிக கட்டுப்படுகள் விதிக்கப்பட்டுள்ளது.தற்போது தென் பகுதி மீனவர்கள் கட்டுப்பாடின்றி வர முயற்சிக்கின்றார்கள்.தற்போதைய அமைதிச்சூழலிலும் எம்மால் தொழில் செய்ய முடியாதுள்ளதை நினைத்து எமது மீனவர்கள் வேதனைப்படுகின்றார்கள்.
-வட பகுதி மீனவர்கள் முப்பது வருடமாக யுத்தத்தால் பாதீக்கப்பட்டதை கருத்தில் கொண்டு கடல் தொழில் அமைச்சர் அவர்கள் கடந்த பல கூட்டங்களில் வெளி மாவட்ட மீனவர்கள் வடபகுதிக்கு கடற்றொழிலின் நிமித்தம் செல்ல வேண்டாம் என்று அடிக்கடி தெரிவித்திருப்பதாக நாம் அறிகின்றோம்.மேலும் வட பகுதியில் தொழில் செய்வதாயின் அப்பகுதியில் உள்ள மீனவ கூட்டுறவுச்சங்கங்களுடன் சுமுகமாக பேசி அவர்களின் வாழ்வாதார தொழிலுக்கு பாதீப்பு ஏற்படாத வகையில் சங்கங்களின் அனுமதியுடன் தான் அங்க செல்ல வேண்டும் என பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தமை அறிந்து மன்னார் மாவட்ட மீனவர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தோம்.
-இந்த நிலையில் தென்பகுதி மீனவர்களின் வருகை தொடர்பாக கடந்த 24-09-2012 ம் திகதி அன்று தலைமன்னார் கடற்படைத்தளத்தில் கடற்படை உயரதிகாரிகள்,மன்னார் கடற்தொழில் பணிப்பாளர்,தென்பகுதி மீனவர் பிரதிநிதிகள்,எமது சங்கம்,தலைமன்னார்,சிலாவத்துரை மீனவ கூட்டுறவுச்சங்கங்களின் பிரதி நிதிகளுக்கிடையில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போது 50 இற்கு மேற்பட்ட படகுகளை அனுமதிப்பதினால் எமது வாழ்வாதாரம்,பொருளாதாரத்தில் ஏற்படும் பாதீப்புக்களினை நாம் விளக்கமாக எடுத்துக்கூறி 2012 ஆம் 50 தென்பகுதி படகுகளை மட்டுமே சௌத்பார் பகுதிக்கு தொழில் செய்ய அனுமதிப்போம் என தெரிவித்தோம்.
அப்போது உதவி கடற்தொழில் பணிப்பாளர் அவர்கள் கடற்தொழில் அமைச்சர் அவர்கள் 2012 ஆண்டு இவ்வருடம் 65 தென்பகுதி படகுகளினை அனுமதிக்குமாறு தமக்கு அறிவுறுத்தியிருப்பதாக அக்கூட்டத்தில் தெரிவித்தார்.நீண்ட விவாதங்களின் பின் அமைச்சர் அவர்களின் வேண்டு கோளுக்கு அமைவாக 65 படகுகளினை மட்டும் இவ்வருடம் சௌத்பார் பகுதிக்கு நாம் அனுமதித்துள்ளோம்.
-28-10-2012 ஆம் திகதி தென்பகுதி மீனவர்களின் வருகை தொடர்பான கலந்துரையாடல் எமது சங்கத்தினருக்கும் தள்ளாடி இராணுவ முகாம் அதிகாரிகளுக்கும் இடையில் இடம் பெற்றது.அதில் அவர்கள் தென்பகுதியில் இருந்து வரும் 108 படகுகளிற்கு சங்கம் பாஸ் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
நாம் எமது மீனவ சமூகத்தின் கடந்த கால நிலையினை விளக்கமாக எடுத்துக்கூறினோம்.எமது பகுதியில் அதிகரித்து வரும் மீன்பிடி தொழிலாளர்களின் அதிகரிப்பினால் படகுகள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இரண்டு வருடத்திற்கு முன் சௌத்பார் கடற்கரை பகுதிகளில் அமைக்கப்பட்ட தற்காலிக கொட்டு வாடிகளை அகற்ற மறுக்கின்றனர்.
இதனால் எமது மீனவர்களின் பாராம்பறிய கரவலைத்தொழிலை செய்யமுடியாதுள்ளது.
தடை செய்யப்பட்ட வலைகள்,தொழில்கள் அங்கு உருவாக்கப்பட்டு வருகின்றது.தற்போது இந்தியாவிலிருக்கும் எமது மீனவர்களும் படிப்படியாக நாடு திரும்பிக்கொண்டிக்கின்றனர்.
இதனால் நாங்கள் அணைவரும் பருவ காலத்தில் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு வருடத்தில் குறித்த பருவ காலத்தில் 6 மாதங்கள் மட்டுமே தொழில் செய்கின்றோம்.ஆனால் தென்பகுதி மீனவர்கள் தென்பகுதியில் முதல் 6 மாத பருவ காலத்தில் தொழில் செய்முது விட்டு எமது பகுதியில் பருவ காலம் தொடங்கும் போது இங்கு வந்து மிகுதி 6 மாதம் எமது தொழில்,வாழ்வாதாரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதை எம்மால் அனுமதிக்க முடியும்.
24-09-2012 திகதி கூட்டத்தில் 65 படகுகளை மட்டுமே கடற்தொழில் அமைச்சரின் வேண்டு கோளுக்கு அமைவாக இவ்வருடம் சௌத்பார் கடற்பகுதியில் தொழிலில் ஈடுபட அனுமதித்துள்லோம்.இதற்கு இராணுவ அதிகாரிகள் சம்மதம் தெரிவிக்க மறுக்கின்றனர்.
வருகின்ற 108 படகுகளிற்கும் சங்கம் பாஸ் வழங்க மறுத்தால் அவர்களுக்கு தாம் கடற்படையூடாக பாஸ் வழங்கி அவர்களுக்கு எமது பாரம்பரிய சௌத்பார் பகுதியில் தொழில் செய்ய அனுமதிக்கப்போவதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
எமது பாரம்பரிய தொழில் துறையில் நாம் அவர்களிற்கு வழங்கும் சலுகைகளை அவர்கள் சில படையினரைப்பயண்படுத்தி அத்துமீரல்களை மேற்கொண்டு அதனை உரிமைகளாக மாற்ற முயற்சிக்கின்றார்கள்.இதனை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
நாங்கள் இந்த நாட்டு மக்கள்.தென்பகுதி மக்கள் இரு பருவகாலத்திலும் உழகை;க வேண்டும்.வடபகுதி சமூகம் அவர்களுக்கு வழிவிட வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்.நாம் எமது உரிமைகளினை விட்டுக்கொடுக்க மாட்டோம்.
உரிமைகள் மறுக்கப்படும் பட்சத்தில் ஜனநாயக ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.எனவே எமது பாரம்பரிய தொழில்துறையில் தென்பகுதி மீனவர்கள் அத்துமீறி வருகை தந்து தொழில் செய்வதை நிறத்தி ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து இதற்காண தீர்வை பெற்று நாம் சுதந்திரமாக அச்சுருத்தல்கள்,இடையூறுகள்,தடை கள் இன்றி தொழில் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம் என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்பகுதி மீனவர்கள் மன்னார் சௌத்பார் கடற்பரப்பை ஆக்கிரமிப்பு-பனங்கட்டிக்கொட்டு மீனவர் கூட்டுறவுச்சங்கம் அரச அதிபருக்கு மகஜர் அனுப்பி வைப்பு-
Reviewed by Admin
on
November 06, 2012
Rating:
No comments:
Post a Comment