உடலில் உலோகத்துண்டுகளுடன் வாழும் மாணவர்களுக்கு விசேட வைத்திய சிகிச்சை
யுத்த காலத்தில் படுகாயமடைந்து, உடலில் உலோகத்துண்டுகளுடன் பெறும் சிரமத்துடன் வாழ்ந்து வரும் பாடசாலை மாணவர்களுக்கு விசேட வைத்திய வசதிகளுடன் சிகிச்கையளிக்க நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது' என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்தும் மாவட்டத்தில் நிலவுகின்ற பிரச்சினைகள் குறித்தும் ஆராய்வதற்கான மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
இதன்போது மேற்படி விடயம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
'யுத்தம் முடிவுற்று மூன்றரை ஆண்டுகளாகியும் வன்னி மாணவர்களின் உடலில் உள்ள வெடிபொருட் சன்னங்களின் துகள்கள் அகற்றப்படாமல் இருப்பதுடன் அவ்வாறு பாதிப்புற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கைகூட தெரியாமலிருக்கின்றது. இது தொடர்பில் விபரங்களைத் திரட்டி தன்னிடம் வழங்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் மாகாண கல்விப் பணிப்பாளரிடம் கேட்டுக்கொண்டார்' என அவர் தெரிவித்தார்.

Reviewed by NEWMANNAR
on
November 06, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment