புதுக்குடியிருப்பு இரணைபாலயம் பகுதியில் புதைத்து வைக்கப்பட்ட ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்பு.

மன்னார் பொலிஸ் புலனாய்வுப்பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்தகவலை அடுத்து அங்கு சென்ற குறித்த குழுவினர் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெடி பொருட்களை மீட்டுள்ளனர்.
இதன் போது ரீ-56 ரக குண்டு-370, 12.7 மி.மீற்றர் குண்டு 217, 15மி.மீற்றர் குண்டுகள் 18, எம்.பி,எம்.ஜீ குண்டுகள்- 640, 18 மி.மீற்றர் எச்.இ.ஏ.ரி குண்டுகள் -2 கைக்குண்டு-01 ஆகியவை மீட்கப்பட்டுள்ளது.
தற்போது மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் அணைத்தும் இலங்கை இராணுவத்திடம் செயலிலக்கச் செய்வதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பு இரணைபாலயம் பகுதியில் புதைத்து வைக்கப்பட்ட ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்பு.
Reviewed by NEWMANNAR
on
November 19, 2012
Rating:

No comments:
Post a Comment