மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்த நிதி ஒதுக்கப்படவில்லை: வரவு, செலவுத்திட்டம் குறித்து செல்வம் எம்.பி
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு எதுவித அடிப்படை வசதிகளுமின்றி மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க இந்த வரவு செலவுத்திட்டத்தில் ஒரு சதமேனும் ஒதுக்கப்படவில்லை. இது அரசின் ஓரவஞ்சனையை அம்பலப்படுத்தியுள்ளதென வன்னி மாவட்ட எம்.பி செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இந்தியாவும் ஏனைய நாடுகளும் வழங்கிய கொட்டகைகளில் யுத்தத்தால் இடம்பெயர்ந்து மீள் குடியேற்றப்பட்ட மக்கள் எதுவித அடிப்படை வசதிகளுமின்றி அவல வாழ்க்கை நடத்துகின்றனர். இவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் இந்த வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்படாததிலிருந்து அரசு தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள அக்கறை தெளிவாகியுள்ளது.
இதேவேளை 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து இந்த வரவு செலவுத்திட்ட உரையில் ஜனாதிபதி முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார். 13 ஆவது அரசியலமைப்பை தாம் முழுமையான தீர்வாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பிரச்சினை தீர்வுக்கு இது ஒரு மைல் கல்லாகும்.
அரசு கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி அதில் எட்டப்படும் தீர்வை நாடாளுமன்ற தெரிவுக்குழு முன் வைக்க இணங்கியது. ஆனால் இறுதியில் அந்த இணக்கப்பாடு மீறப்பட்டது. இந்த நிலையில் ஜனாதிபதி வரவு செலவுத்திட்ட உரையில் கூட்டமைப்பின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளார். நாம் எப்படி ஒத்துழைப்பு வழங்குவது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தியாவும் ஏனைய நாடுகளும் வழங்கிய கொட்டகைகளில் யுத்தத்தால் இடம்பெயர்ந்து மீள் குடியேற்றப்பட்ட மக்கள் எதுவித அடிப்படை வசதிகளுமின்றி அவல வாழ்க்கை நடத்துகின்றனர். இவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் இந்த வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்படாததிலிருந்து அரசு தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள அக்கறை தெளிவாகியுள்ளது.
இதேவேளை 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து இந்த வரவு செலவுத்திட்ட உரையில் ஜனாதிபதி முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார். 13 ஆவது அரசியலமைப்பை தாம் முழுமையான தீர்வாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பிரச்சினை தீர்வுக்கு இது ஒரு மைல் கல்லாகும்.
அரசு கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி அதில் எட்டப்படும் தீர்வை நாடாளுமன்ற தெரிவுக்குழு முன் வைக்க இணங்கியது. ஆனால் இறுதியில் அந்த இணக்கப்பாடு மீறப்பட்டது. இந்த நிலையில் ஜனாதிபதி வரவு செலவுத்திட்ட உரையில் கூட்டமைப்பின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளார். நாம் எப்படி ஒத்துழைப்பு வழங்குவது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்த நிதி ஒதுக்கப்படவில்லை: வரவு, செலவுத்திட்டம் குறித்து செல்வம் எம்.பி
Reviewed by NEWMANNAR
on
November 11, 2012
Rating:

No comments:
Post a Comment