சம்பத்வங்கியினால் மன்னாரில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கௌரவிப்பு-மாணவர்களின் பட ம் இணைப்பு

இந்நிகழ்வானது மன்னார் ஆயர் இல்லத்தில் அதிமேதகு வண.பிதா இராயப்பு ஜோசெப் மற்றும் குருமுதல்வர் விக்டர் சோசை ஆகியோர் முன்னிலையில் ஆயர் இல்லத்தில் 22ம் திகதி வியாழக்கிழமை பி.ப 3.00 மணியளவில் நடைபெற்றது
சம்பத் வங்கியினூடாக இக்கௌரவிப்பு நிகழ்வினை வழங்குவதற்கான ஏற்பாடுகளை வங்கியின் முகாமையாளரான திரு. தங்கராஜ குகநேசன் (குகன்) அவர்கள் மேற்கொண்டிருந்தார்.
இதில் மன்னார் மாவட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற 5 மாணவர்களான:
1. N அலேசியன் டயஸ் - புனித. பற்றிமா மாகவித்தியாலயம் பேசாலை
2. துரைரத்தினம் வினுஜன் - புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மன்னார்
3. ஜோன்மார்க் நுஜன் - முருங்கன் மகாவித்தியாலயம் முருங்கன்
4. ஜோகநாதன் டனிஜோநாத் - புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மன்னார்
5. பிரபாகரன் நாவசௌமியா – சித்திவினாயகர் கல்லூரி மன்னார்
ஆகியோர் ஆயரின் அசியுடன் ரூபா. 5,000.00 பெறுமதியான வங்கிக்கணக்கு புத்தகம், புத்தகப்பை மற்றும் பணத்தினை சேமிக்கும் பழக்கத்தினை மேற்கொள்வதற்கான உண்டியல்கள் என்பனவற்றை தங்களுடைய பெற்றோருடன் பெற்றுக்கொண்டனர்.
வங்கியின் பிராந்திய முகாமையாளர் திரு. அன்ரன் நிதர்சன் மாணவர்கள் தொடர்ச்சியாக தமது கல்வியிலே சிறப்புற கற்றவேண்டும் என்று கேட்டக்கொண்டதுடன் இவர்களைப் பார்த்து சகமாணவர்களும் தமது கல்வி தரங்களை முன்னேற்ற வேண்டும் என்பதே தனது பிரயாசையாக காணப்படுவதாக மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் எடுத்துரைத்தார்.
![]() |
ஜோன்மார்க் நுஜன் - முருங்கன் மகாவித்தியாலயம் முருங்கன் |
![]() |
N அலேசியன் டயஸ் - புனித. பற்றிமா மாகவித்தியாலயம் பேசாலை |
![]() |
பிரபாகரன் நாவசௌமியா – சித்திவினாயகர் கல்லூரி மன்னார் |
![]() |
ஜோகநாதன் டனிஜோநாத் - புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மன்னார் |
சம்பத் வங்கியின் கோகுலன் குகதாஸன் - பிராந்திய நிறைவேற்றதிகாரி மற்றும் அனந்தன் ரட்ணசபாபதி - ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.
சம்பத்வங்கியினால் மன்னாரில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கௌரவிப்பு-மாணவர்களின் பட ம் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
November 24, 2012
Rating:

No comments:
Post a Comment