மன்னார் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணாமாக அங்கு அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து மன்னாரிலிருந்து வெளிமாவட்டங்களுக்கான அனைத்து போக்குவரத்துக்களும் இன்று காலையுடன் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அடை மழை பெய்துவருவதுடன், அங்கு வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசாங்க உத்தியோகர்களின் விடுமுறைகளும் இரத்துச்செய்யப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் தொடர்பான அவசரக் கூட்டம் அம் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதன்போதே மன்னார் மாவட்டத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய பிரதேச செயலாளர்களும் அரசாங்க அதிகாரிகளும் கிராம சேவை அலுவலகர்களும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment