அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மீண்டும் இராணுவத்தின் கெடு பிடி ஆரம்பம்.

மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்குப்பின் மீண்டும் இராணுவத்தினர் புதிய காவலரண்களை அமைத்தல் மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடும் செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்ற  நிலையில் மன்னார் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.



 சிவில் நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் மக்களின் குடியிருப்புக்கள் மற்றும் பொது இடங்களில் காவலரண்களை அமைத்திருந்த இராணுவத்தினர் தமது காவலரண்களை அகற்றிய நிலையில் அவ்விடங்களில் இருந்து இராணுவத்தினர் படைமுகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.

 இந்த நிலையில் மன்னாரில் இடம் பெற்ற கொள்ளைச்சம்பவம்,கொலைச்சம்பவம் ஆகியவற்றை தொடர்ந்து மன்னாரில் மீண்டும் படையினரது கெடுபிடிகள் ஆரம்பித்துள்ளது. மன்னார் பகுதியில் மக்களின் குடியிருப்புகளுக்கு அருகாமையிலும்,பொது இடங்களிலும் மீண்டும் இராணுவ காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளது.

 மன்னார் தாழ்வுபாடு வீதியூடாக வைத்தியசாலை வீதியை வந்தடையும் வாகனங்களின் இலக்கங்கள் பதிவு செய்யப்படுவதோடு உரிமையாளர்களின் பெயர்,விபரங்களும் பதியப்படுகின்றது.

 இதே வேளை மன்னார் பொது விளையாட்டு மைதான சந்தியில் கடமையில் இருக்கும் இராணுவத்தினர் தாராபுரம் பிரதான வீதியூடாக மன்னார் வரும் முச்சக்கர வண்டிகள்,மோட்டார் சைக்கில்கள் ஆகியவை நிறுத்தப்பட்டு அதில் பயணிப்பவர்களிடம் எங்கிருந்து வருகின்றீர்கள்? ஏங்கு செல்லுகின்றீர்கள் என்ற கேள்விகளை கேட்கினறனர். பின் வாகன இலக்கங்களையும்,அடையாள அட்டை இலக்கத்தையும் பதிவு செய்கின்றனர். இதனால் மக்கள் மத்தியில் மீண்டும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.
மன்னாரில் மீண்டும் இராணுவத்தின் கெடு பிடி ஆரம்பம். Reviewed by NEWMANNAR on December 24, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.