அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-மதவாச்சி பிரதான வீதியில் பல வீதிகள் வெள்ளத்தில் மிதப்பு.

மன்னார் மதவாச்சி பிரதான வீதியின் கட்டையடம்பன் மற்றும் தம்பனைக்குளம் பகுதிகளில் மல்வத்து ஓயா நீர் பெருக்கெடுத்துள்ளதன் காரணத்தினால் வாகனப்போக்குவரத்துக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.


 தற்போது மல்வத்து ஓயா பெருக்கெடுத்துள்ளதன் காரணத்தினால் தம்பனைக்குளம் கிராமம் முழுமையாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் குறித்த கிராமங்களைச் சேர்ந்த அனைத்து மக்களும் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட சின்னப்பண்டிவிருச்சான் ம.வி பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 இந்த நிலையில் வெள்ள நீர் படிப்படியாக அதிகரித்த நிலையில் மன்னார் மதவாச்சி பிரதான வீதிகளில் இரண்டு இடங்களில் தேங்கியுள்ளது. இதனால் தென்பகுதியில் இருந்து மன்னாருக்கு வரும் அரச,தனியார் போக்குவரத்துக்கள் மடு திருத்தலத்தினூடாக பருப்புக்கடந்தான் கிராம வீதியூடாக மன்னாரை சென்றடைகின்றது.

 இதே வேளை மன்னாரில் இருந்து தென்பகுதிக்குச் செல்லும் சகல போக்குவரத்துச் சேவைகளும் உயிலங்குளம் வீதியூடாக சென்று பருப்புக்கடந்தான் வீதியை சென்றடைந்து அங்கிருந்து மடுத்திருத்தலத்தினுடாக போக்குவரத்துச்சேவைகள் இடம் பெற்று வருகின்றது.

 தற்போது முருங்கன் - பறையனாளன் குளம் வீதியிலும்,தம்பனைக்குளம்,கட்டையடம்பன் பகுதிகளிலும் உள்ள பிரதான வீதிகள் தற்போது வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.







மன்னார்-மதவாச்சி பிரதான வீதியில் பல வீதிகள் வெள்ளத்தில் மிதப்பு. Reviewed by NEWMANNAR on December 26, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.