மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மக்கள் இடம்பெயர்வு, பிரதான வீதிகளும் மூடப்பட்டுள்ளது[ படங்கள்]
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக 4229 குடும்பங்களைச் சேர்ந்த 17339 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஏ.சி. றியாஸ் தெரிவித்தார்.
மன்னார்,நானாட்டான்,முசலி,மடு, மாந்தை மேற்கு ஆகிய 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 1307 குடும்பங்களைச்சேர்ந்த 4623 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17 இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் நகர் பகுதியில் சாந்திபுரம்,சௌத்பார்,எமில்நகர் ,கோந்தைப்பிட்டி கிராமங்களும் தற்போது வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
இதே வேளை மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் அமைந்துள்ள 2 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதன் காரணத்தினால் குறித்த கிராமத்தைச் சேர்ந்த 75 குடும்பங்கள் வெளியேறும் நிலையில் உள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தாழையடி,புதுக்குளம்,தேவன் பிட்டி ஆகிய கிராம மக்களும் தற்போது வெளியேறி வருகின்றனர்.
தற்போது பருப்புக்கடந்தான் குளம் உடைப்பெடுக்கும் நிலையில் உள்ளது.
நாயாத்து வழி வீதி முற்றாக பாதிப்படைந்துள்ளமையினால் குறித்த வீதியூடான போக்குவரத்துக்கள் பாதிப்படைந்துள்ளது.
இதே வேளை பாலியாறு,பரங்கியாறு,நாயாறு ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளமையினால் ஏ-32 வீதி மூடப்பட்டுள்ளது.
இதே வேளை மடு-பாலம்பிட்டி பிரதான வீதி,மன்னார் மதவாச்சி பிரதான வீதி,மடு-பெரிய தம்பனை பிரதான வீதி ஆகியவற்றின் போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மக்கள் இடம்பெயர்வு, பிரதான வீதிகளும் மூடப்பட்டுள்ளது[ படங்கள்]
Reviewed by NEWMANNAR
on
December 27, 2012
Rating:
No comments:
Post a Comment