மன்னாரில் பிரபல பாடசாலைகளில் தரம்-01 இல் மாணவர்களை அனுமதிக்க நன்கொடை என்ற பெயரில் அதிகளவு பணம் வசூலிப்பு.

ஒவ்வெரு வருடமும் இடம் பெற்று வருகின்ற குறித்த வசூலிப்பு இவ்வருடம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் நகர் பகுதியில் பல பாடசாலைகள் அமைந்துள்ள போதும் சில பாடசாலைகளிலே குறித்த பண வசூலிப்பு இடம் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பணத்தினை பாடசாலை அபிவிருத்திச்சங்கம் அல்லது பழையமாணவர் சங்கத்தினுடாக வசூழிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தரம் 01 இல் மாணவர்களை அனுமதிப்பதற்காக குறித்த பிரபல பாடசாலைகளில் 5 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை கட்டாயப்படுத்தி பெற்றுக்கொள்ளப்படுகின்றது.
இதே வேளை பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 1 இற்கு மாணவர்களை அனுமதிக்கும் போது கதிரை,மேசைக்கு கட்டணமாக ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட பெற்றோர் ஒருவர் தெரிவித்தார்.
வறிய பெற்றோர் அதிகளவான பணத்தை செலுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனவே மன்னார் வலயக்கல்வித்தினைக்களம் இவ்விடையத்தில் தலையிட்டு குறித்த பாடசாலை அதிபர்,ஆசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட பெற்றோர் தெரிவித்தனர். பணத்துக்காக கல்வி
மன்னாரில் பிரபல பாடசாலைகளில் தரம்-01 இல் மாணவர்களை அனுமதிக்க நன்கொடை என்ற பெயரில் அதிகளவு பணம் வசூலிப்பு.
Reviewed by NEWMANNAR
on
January 21, 2013
Rating:

No comments:
Post a Comment