வங்காலையில் அமைக்கப்பட்ட வீதி தற்போது குன்றும் குழியுமாக காட்சியளிப்பு.
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் பல இலட்சம் ரூபா செலவில் கடந்த வருட இறுதியில் வங்காலை பிரதான வீதியின் திருத்த வேலைகள் நிறைவடைந்தன.
ஆனால் தற்போது அவ் வீதிகளின் சில இடங்கள் உடைந்த நிலையில் குன்றும் குழியுமாக காட்சியளிப்பதாக பிரதேச வாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இவ் வீதிகளின் திருத்த வேலைகள் நிறைவடைந்து இரு மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளன. அத்துடன் மழை காலங்களில் நீர் வடிந்து செல்வதற்கான வடிகால் அமைப்பும் சீரற்று காணப்படுகின்றது. இது சம்மந்தமாக உரியவர்களிடம் கேட்டபோது வீதியின் திருத்த வேலைகளுக்குள்ளேயே வடிகாலமைப்பும் காணப்படுகின்றது என தெரிய வருகின்றது.
மழை காலங்களில் இவ் இடங்களில் நீர் தேங்கி நிற்பதால் மக்கள் பல இன்னல்களை எதிர் நோக்குகின்றனர். இது சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கும் படியும் வீதியை புனருத்தானம் செய்து தரும் படியாகவும் மக்கள் கேட்டு உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Reviewed by NEWMANNAR
on
January 14, 2013
Rating:

No comments:
Post a Comment