மீள் எழுச்சி எனும் பெயரில் மன்னார் முருங்கன் பகுதியில் 75 சிங்கள குடும்பங்கள் குடியேற்றம்!
நானாட்டான் பிரதேச செயலhளர் பிரிவுக்குற்பட்ட முருங்கன் பகுதியில் 75 சிங்கள குடும்பங்கள் கடந்தவாரம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-மன்னார்- மதவாச்சி பிரதான வீதி முருங்கன் சந்தியில் இருந்து குறித்த 75 குடும்பங்களும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படைவசதிகளும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
மீள் எழுச்சித்திட்டக் கிராமம் என்ற பெயரில் இந்த மீள்குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தற்போது தகரத்தினால் அடைக்கப்பட்ட வீடுகளில் குறித்த சிங்கள மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இதே வேளை அண்மையில் மக்கள் வங்கியின் 50 ஆண்டு நிறைவை முன்னிட்டு மடு சந்தியில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்திலும் பெரும்பாலானவை சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனினம் மீள் குடியேற்றப்பட்ட தமிழ்,முஸ்ஸிம் மக்கள் காடுகளுக்கு மத்தியில் எவ்வித உதவிகளும் இன்றி அகதி வாழ்வு வாழ்ந்து வருகின்றனர்.
மீள் எழுச்சி எனும் பெயரில் மன்னார் முருங்கன் பகுதியில் 75 சிங்கள குடும்பங்கள் குடியேற்றம்!
Reviewed by NEWMANNAR
on
January 28, 2013
Rating:
No comments:
Post a Comment