முருங்கன் டொன்பொஸ்கோ பயிற்சிக்கல்லூரி மாணவர்கள் இருவர் விளக்கமறியல்.-2ம் இணைப்பு
மன்னார் முருங்கன் டொன்பொஸ்கோ பயிற்சிக்கல்லூரியில் காணமல் போன பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இரண்டு மாணவர்களையும் எதிர்வரும் 06 ஆம் திகதி(06-02-2013) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
-மன்னார் முருங்கனில் அமைந்துள்ள டொன் பொஸ்கோ பயிற்சிக்கல்லூரி மற்றும் மாணவர் விடுதியில் இருந்து நீண்ட நாற்களாக பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டது.
-இந்த நிலையில் குறித்த நிலையத்தின் இயக்குனரினால் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வி.டி.ஜீ.எஸ்.தர்மகீர்த்தி தலைமையிலான பொலிஸ் குழுவினர் தீவிர விசாரனைகளையும் தேடுதல்களையும் மேற்கொண்டனர்.
-இதன் போது குறித்த பயிற்சி விடுதியில் தங்கியிருந்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரனைகள் மேற்கொள்ளப்பட்ட போது அங்கிருந்து கல்வி கற்று வெளியேறிய மேலும் ஒரு மாணவன் கைது செய்யப்பட்டார்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளின் போது விற்பனை செய்யப்பட்ட மற்றும் பதுக்கி வைக்கப்பட்ட சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
இதன் போது 8 கனணித்தொகுதிகள்,1 மடிக்கனணி,1 மல்டி மீடியா ஆகியவை மீட்கப்பட்டது.
இந்த நிலையிலே நேற்று செவ்வாய்க்கிழமை குறித்த 02 மாணவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த இருவரையும் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்
முருங்கன் டொன்பொஸ்கோ பயிற்சிக்கல்லூரி மாணவர்கள் இருவர் விளக்கமறியல்.-2ம் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
January 30, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment