மன்னாரில் கிறிஸ்தவ ஒன்றிப்பு வார நிகழ்வுகள்
இவ்வாண்டுக்கான கிறிஸ்தவ ஒன்றிப்பு வார மையப்பொருளான 'எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?' (மீக்கா 6 : 6 – 8) என்ற தலைப்பில் மன்னார் மறைமாவட்ட சமூகத்தொடர்பு அருட்பணி மையத்தின் இயக்குனர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கத்தோலிக்க திருச்சபையின் சார்பில் மன்னார் பேராலயப் பங்குத்தந்தை அருட்திரு. எஸ். சத்தியராஜ் அடிகளார், எழுத்தூ}; பங்குத்தந்தை அருட்திரு. இ. செபமாலை அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மன்னார் மெதடிஸ்த திருச்சபையின் போதகர் அருட்திரு. குணாளன் மற்றும் மன்னார் அமெரிக்க சிலோன் மிசன் போதகர் அருட்திரு. தர்மலகுலசிங்கம் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கெடுத்தினர். இதைவிட திருச்சபைகளின் பொதுநிலைப் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். எழுத்தூர் பங்கு பாடகர் குழாமினர் பாடல்களை வழங்கினர்.
மன்னாரில் கிறிஸ்தவ ஒன்றிப்பு வார நிகழ்வுகள்
Reviewed by NEWMANNAR
on
February 06, 2013
Rating:
No comments:
Post a Comment