அண்மைய செய்திகள்

recent
-

இடம்பெயர்ந்த யாழ்ப்பாண மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வுகள்-படங்கள்

இவ்வாண்டுக்கான பாடசாலை மட்ட மீலாத் விழா புத்தளத்தில் இடம்பெயர்;ந்த மாணவர்க ளுக்கான 6 பாடசாலைகளிலொன்றான யாழ் மாவட்ட மாணவர்கள் கல்வி கற்கும் உமராபாத் தில்லையடியிலமைந்துள்ள மன்ஃபுத் ஃஅன்சாரி அ.மு.க.பாடசாலையில் நான்கு மதப் பெரியார்களின் ஆசியுரையுடன் பாடசாலை அதிபர் ஏ.எச்.ஏ.வதூத் தலைமையில் வெகு சிறப்பாக நடை பெற்றது காலை 7.00 மணிதொடக்கம் சிரமதானமும் 10.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை பாடசாலை மாணவர்களினதும் முஜாகிதீன் மத்ரஸா மாணவர்களின் நிகழ்ச்சியுடனும் மௌலவி நஜ்முதீன் அஸ்கரி அவர்களது பயானுடனும் எகிப்தின் காரி அப்துல் நாஸி;ர் அவர்களது கிராத் ஓதலும் இந்நிகழ்வை சிறப்பித்தன. 














புத்தளம்.நகர் பன்சல துட்டுவாவ தம்மிக தேரோ மன்னார் வீதி பிள்ளையார் கோவில் ஜெகதகீஸ்வரசர்மா குருக்கள் சென்மேரிஸ் அதிபர் அருட் சகோதரி அவர்களும் இந்நிகழ்வி;ல் கலந்து கொண்டமை இந்நிகழ்வை மேலும் மெருகூட்டியது. பிராந்திய ஆணையாளர் லியாவுடீன் பிரதம அதிழதியாகவும் பிரதிக்கல்விப்பணிப்பாளர் மன்னார் எம்.எஸ். அக்பர்.முஜாகிதீன் அரபிக்கல்லூரி அதிபர் முபாரக் மௌலவி கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர் வந்திருந்தவர்கள் அனைவரும் இதுவே இன்றைய காலத்துக்குப் பொறுத்தமான நிகழ்வுகளிலொன்று என்று கூறிச் சென்றனர்

அலீம் ஆசிரியர்



இடம்பெயர்ந்த யாழ்ப்பாண மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வுகள்-படங்கள் Reviewed by NEWMANNAR on February 06, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.