அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட அரச ஊடகவியலாளர்கள் காணாமல் போனமை தொடர்பில் விசாரனை.

மன்னார் மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர்கள் நாள்வருக்கு கடந்த பல மாதங்களாக தொடாந்தும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வந்த நிலையில் இருதியாக கடந்த மாதம் 16 ஆம் திகதி(16-01-2013) மன்னார் மாவட்ட ஊடாகவியலாளர்கள் 4 பேரூக்கு சியாத் இயக்கம் என்ற பெயரில் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.



குறித்த மிரட்டல் கடிதம் 2 அரச ஊடகவியலாளர்களுக்கும்,2 தனியார் ஊடகவியலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில் குறித்த 2 அரச ஊடகவியலாளர்களினது தொடர்புகளும் கடந்த மாசி மாதம் முதல் இல்லாததன் காரணத்தினால் ஏனைய 2 ஊடகவியலாளர்களும் பாதுகாப்பு தரப்பினராலும்,புலனாய்வுத்துரையினரினாலும் தொடர்ந்தும் இரகசிய விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.



-இது தொடர்பாக மன்னார் மாவட்டத்தின் சுதந்திர ஊடகவியலாளர் றொசேரியன் லெம்போட் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது,,,,



கடந்த மாதம் 16 ஆம் திகதி மன்னார் ஊடகவியலாளர்கள் 4 பேrக்கு கிடைக்கப்பெற்ற கொலை மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து எங்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.



இது தொடர்பில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் தற்போது மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரனை இடம் பெற்று வருகின்றது.



இந்த நிலையில் அச்சுருத்தல் விடுக்கப்பட்ட ஊடகவியலாளர்களில் 2 அரச ஊடகவியலாளர்கள் அடங்குகினறனர்.



கடந்த சில வாரங்களாக அவர்களுடைய தொடர்பு துன்டிக்கப்பட்டுள்ளது.அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது எமக்கு தெரியாது.



உள் நாட்டிலா அல்லது பாதுகாப்பு கருதி வெளிநாட்டிலா தஞ்சமடைந்துள்ளார்கள் என்பது எமக்கு தெரியாது. இவர்கள் தொடர்பில் புலனாய்வுத்துரையினர் என்னிடம் தொடர்ந்தும் விசாரனைகளை மேற்கொண்டு வருகினறனர் என தெரிவித்தார்.
மன்னாரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட அரச ஊடகவியலாளர்கள் காணாமல் போனமை தொடர்பில் விசாரனை. Reviewed by NEWMANNAR on February 19, 2013 Rating: 5

1 comment:

CeylonV said...
This comment has been removed by a blog administrator.
Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.