மன்-சித்திவிநாயகர் இ.தே. பாடசாலை மாணவர்கள் 68 பேர் இவ்வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு- அதிபர் ஏ.ஐ.தயானந்தராஜா
உயிரியல் விஞ்ஞான பிரிவில் 41 மாணவர்கள் பரிட்சைக்குத்தோற்றி 58.5 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளனர்.
இதில் எஸ்.டிலான்ராஜ் மன்னார் மாவட்டத்தில் உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் 3ஏ சித்தி பெற்று மாவட்டத்தில் முதலாவது இடத்தையும், தேசிய ரீதியில் திறமைச்சித்தியையும் பெற்றுள்ளார்.
எம்.ஜெ.பாத்திமா ஐஸ்லியா மாவட்ட மட்டத்தில் 6 ஆவது இடத்தையும்,ஏ.எம்.பாத்திமா சஹ்மிலா மாவட்ட மட்டத்தில் 7 வது இடத்தையும் பெற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.டி.வினிபி ரட் ஐhன்சன் மாவட்டத்தில் 8 இடத்தையும் பெற்றுள்ளார்.
கணிதப்பிரிவில் 20 மாணவர்கள் தோற்றி 55 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கான தகுதியை பெற்றுள்ளனர்.ஜே.ஐPசஸ் சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாவது இடத்தையும்,எம்.கம்சத்வனி மாவட்டத்தில் 2 ஆம் இடத்தையும்,வி.பாதினி மாவட்ட மட்டத்தில் 4 ஆம் இடத்தையும்,ஏ.ஜே.இம்ரான்கான் மாவட்ட மட்டத்தில் 5 ஆம் இடத்தையும் பெற்று பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும் ஆர்.ரொக்ஸன் குலாஸ் மாவட்ட மட்டத்தில் 6 ஆம் இடத்தையும்,கிரேசியன் கூஞ்ஞ மாவட்ட மட்டத்தில் 7 ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
-வர்த்தகப்பிரிவில் 60 மாணவர்கள் பரிட்சைக்குத்தோற்றி 76.6 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.
எஸ்.திவ்விகா 3 ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் 2 ஆம் இடத்தையும், எம்.றசாந்தன் 2ஏ.வி சித்தி பெற்று மாவட்டத்தில் 4 ஆவது இடத்தையும்,எஸ்.பார்த்திமா 3 ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் 5 ஆம் இடத்தையும்,அந்தோசியா 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் 6 ஆம் இடத்தையும்,யு.தர்சிகா 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் 7 ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
கலைப்பிரிவில் 72 மாணவர்கள் பரிட்சைக்குத்தோற்றி 81.94 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றுள்ளனர்.nஐ.nஐ.பெனா சீர்துரம் மாவட்ட மட்டத்தில் 4 ஆம் இடத்தையும்,பி.தர்மேக்கா மாவட்ட மட்டத்தில் 5 ஆம் இடத்தையும்,எம்.யோகலட்சுமி மாவட்ட மட்டத்தில் 9 ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
உயிரியல் விஞ்ஞான பிரிவில் இருந்து 24 மாணவர்களும்,கணிதப்பிரிவில் இருந்து 11 மாணவர்களும்,வர்த்தகப்பிரிவில் இருந்து 11 மாணவர்களும்,கலைப்பிரிவில் இருந்து 22 மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு nரிவு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையின் அதிபர் ஏ.ஐ.தயானந்தராஜா மேலும் தெரிவித்தார்.
(மன்னார் நிருபர் வினோத்
மன்-சித்திவிநாயகர் இ.தே. பாடசாலை மாணவர்கள் 68 பேர் இவ்வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு- அதிபர் ஏ.ஐ.தயானந்தராஜா
Reviewed by Admin
on
February 19, 2013
Rating:
No comments:
Post a Comment