அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு மக்கள் கொழும்புக்கு சென்று முறைப்பாடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை: ஐ.நா.

கடத்தப்பட்ட மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பில் வடக்கு மக்கள் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு அலுவலகத்தில் முறைப்பாடு செய்ய வேண்டிய அவசியமில்லை என அந்த அமைப்பு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்புடன் தொடர்பு கொள்வதற்கு வேறும் பல்வேறு வழிகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.


 அண்மையில், கடத்தப்பட்ட காணாமல் போனோரின் உறவினர்களினால் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொள்வதற்காக வவுனியாவிலிருந்து புறப்பட்ட மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொழும்பு அலுவலகத்தில் மகஜர் ஒன்றை கையளிக்க திட்டமிட்டிருந்தனர். கொழும்புக் கிளையின் ஊடாக மட்டும் தகவல்களையோ முறைப்பாடுகளை செய்ய வேண்டிய அவசியம் கிடையாது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார்.
வடக்கு மக்கள் கொழும்புக்கு சென்று முறைப்பாடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை: ஐ.நா. Reviewed by Admin on March 08, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.