முசலி-வெளிமலை மக்களின் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்பட்டவில்லை
முசலி-வெளிமலை மீள்குடியேற்ற கிராமத்தில் வாழும் மக்களின் அடிப்படை வசதிகள் இன்னும் செய்து கொடுக்காமையினால் பல்வோறு சிரமங்களை எதிர் நோக்கிவருகின்றனர்.தமது கோரிக்கை இன்னும் நிறைவேற்றவில்லையென கிராம அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் ஐனைத் மனாஸ் தெரிவித்தார்.
கடந்த கால யுத்ததினால் எமது கிராமம் மற்றும் அயல் மீள்குடியேற்ற கிராமங்களான மணற்குளம்இலந்தைகுளம் மற்றும் பண்டாரவெளி மோசமான பாதிப்புக்களை எதிர்கொண்ட கிராமங்கள் ஆகும மிகவும் வறுமைக் கோட்டிற்கும் கடல் தொழில் மற்றும் விவசாய தொழில்களை பிரதானமான தொழில்களை நம்பி இம்மக்கள் வாழ்க்கை நடத்துகின்றனர்.
இக் கிராமத்திற்கு உள்ளே வருவதற்கு பல வீதிகள் இருந்து சில வீதிகள் செப்பனிடாமலும் செய்த வீதிகள் இன்னும் திருத்தப்படாமலும் இருப்பதன் காரணமாக பல வருடகாலமாக இம் மக்கள் பல பிரச்சினைக்கு முகம் கொடுக்கின்றனர். இப்பிரதேசத்தில் உள்ள கிணற்று நீர் குடிப்பதற்கு உகந்தாக இல்லை முசலி பிரதேச சபைக்கு அதிகமான வருமானங்கள் வருகின்ற போதும் அக்கிராம மக்களுக்கு பணத்திற்கு குடிநீர் வழங்குகின்றனர்
அதே போன்று தேவையான வேலையில் குடிநீர் வழங்கப்படுவதும் இல்லை குறிப்பு முசலி பிரதேச சபையினால் கடந்த வருடம் செப்பனிட்ட பண்டாரவெளி-பொற்கேனி பிரதான பிரதான வீதி தற்போது போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் உள்ளது.அதே போன்று முசலி பிரதேசத்தில் உள்ள அதிகமான வீதிகள் உடைந்து குன்றும் குழியுமாக காணப்படுகின்றன. எனவே முசலி பிரதேச சபை செயலாளர் அவர்களே இனிவரும் காலங்களில் பொது வேலைகஞக்கு ஒப்பந்தகார்களை நியமிக்கும் போது அவர்களின் வேலையின் தன்மையினையும் கவனம் செலுத்துமாறு வேண்டிக்கொள்கின்றனர்.
முசலி-வெளிமலை மக்களின் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்பட்டவில்லை
Reviewed by Admin
on
March 09, 2013
Rating:

No comments:
Post a Comment