மன்-நானாட்டான் மகாவித்தியாலயம் 1AB பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது
இப் பாடசாலையானது நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும்.
- 1901ம் ஆண்டு நானாட்டான் அடைக்கலஅன்னை தேவாலயத்தின் தென்புறத்தில் கிடுகினால் வேயப்பட்டு கத்தோலிக்க குருக்களினால் ஆரம்பிக்கப்பட்டது.
- 1940 இல் தற்போது பாடசாலை அமைந்திருக்கும் இடத்திற்கு இப் பாடசாலை இடமாற்றப்பட்டது.
- 1950 இல் தரம் 05 வரை இருந்த இப் பாடசாலை தரம் 08 வரை தரமுயர்த்தப்பட்டது.
- 1960 இல் க.பொ.த.(சா-த)கொண்ட பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது.
- 1961 இல் றோமன் கத்தோலிக்க திருச்சபையின் கீழ் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன ;பாடசாலையாக பெயர் பெற்று அரச பொது நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
- 1972 இல் க.பொ.த. (உ-த) வரை தரமுயர்த்தப்பட்டு கலைத்துறை அறிமுகப்படுத்தப்பட்டது. அத்தோடு மன்-நானாட்டான் மகாவித்தியாலயம் எனப் பெயர் மாற்றப்பட்டது.
- 1977இல் க.பொ.த.(உ-த) இல் வர்த்தகத்துறை அறிமுகப்படுத்தப்பட்டது.1972ம் ஆண்டிலிருந்து 1C பாடசாலையாக 2012 வரை இருந்த இப் பாடசாலையானது
- 01.01.2013 இல் இருந்து கணித, விஞ்ஞான பிரிவுகளை உள்ளடக்கிய 1AB பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது.
1AB பாடசாலையாக அதிகாரபூர்வமாக 01.01.2013 இல் தரமுயர்த்தப்பட்டாலும் இடைக்கால அனுமதியுடன் 18.05.2012 இல் கணித,விஞ்ஞானபிரிவுகள் ,ஆசிரியர் ,செல்வி. துவாரகா விவேகானந்தன் (விஞ்ஞானப் பட்டதாரி-B.S.c யாழ்பல்கலைக்கழகம்) அவர்களை பெறுப்பாசிரியராகக் கொண்டு 08 மாணவர்கள் இக் கற்கை நெறியை முதற்தடவையாக இப்பாடசாலையின் வரலாற்றில் ஆரம்பித்தார்கள்.
மேற்குறிப்பிட்டவாறு 1901ம் ஆண்டிலிருந்து இன்று வரை இப்பாடசாலை படிப்படியாக அறிவிலும்,ஞானத்திலும்,ஆன்மீகத்திலும்,ஒழுக்கத்திலும்,பண்பிலும்,விளையாட்டிலும்,பௌதீகவளத்திலும் மேலும் பலவிடயங்களிலும் வளர்ச்சியடைந்து வருவதோடு இப்பாடசாலைடி வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்த றோமன் கத்தோலிக்க ஆயர்கள்,குருக்கள்,துறவிகள்,அர்ப்பணித்து பணியாற்றிய பொதுநிலையினர்,அதிபர்கள்,ஆசிரியர்கள்,கல்விஅமைச்சு,மாகாணக் கல்வித்திணைக்களம், மன்னார் கல்விவலயம், பெற்றோர்கள், உள்நாட்டிலும்,வெளிநாட்டிலும் வாழும் பழையமாணவர்கள்,நலன்விரும்பிகள்,அபிவிருத்திச்சங்கங்கள் அனைவருக்கும் விசேடநன்றியையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
நானாட்டான் நகரத்தின் மத்தியில் பலகிராமத்தவர்களையும்,பலசமயத்தவர்களையும் தன்னகத்தே கொண்டு வளர்ந்து வரும் இப் பாடசாலையை வாழ்த்துவதோடு குறிப்பாக இப் பாடசாலை வரலாற்றில் முதற் தடவையாக கணித,விஞ்ஞானதுறைகளில் கற்கும் மாணவ,மாணவியரையும் அவர்களுக்குக் கற்பிக்கின்ற ஆசிரியர்களையும் வாழ்த்திநிற்கின்றோம்.
மன்-நானாட்டான் மகாவித்தியாலயம் 1AB பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது
Reviewed by NEWMANNAR
on
March 07, 2013
Rating:
No comments:
Post a Comment