அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் உணவகங்களில் சுகாதாரத்தை மேம்படுத்துதல் தொடர்பில் விழிர்ப்புனர்வு கருத்தரங்கு.


மன்னார் நகரில் உள்ள உணவகங்களின் சுகாதார நிலைமையை மேம்படுத்துதல் மற்றும் தரத்தை உயர்த்துதல் தொடர்பில் உணவகங்களின் உரிமையாளர்களுக்கு விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் கருத்தரங்கு ஒன்று இன்று வியாழக்கிழமை காலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.

குறித்த விழிர்ப்புனர்வு கருத்தரங்கு பாவனை அதிகார சபையின் வட மாகாண இணைப்பாளர் ராஜபக்ஸ கே லயனல் ராஜபக்ஸ தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது மன்னார் நகர சபையின் தலைவர் சந்தான் பிள்ளை ஞானப்பிரகாசம்,உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ்,நகர சபை உறுப்பினர் இரட்ன சிங்கம் குமரேஸ்,மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி ஞானசீலன் குனசீலன்,மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் மன்னார் நகரில் உள்ள உணவகங்களின் உரிமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மன்னார் நகரில் உள்ள உணவங்களில் ஏற்பட்டுள்ள உள்ள சுகாதார குறைபாடுகள் தொடர்பிலும் அவற்றை எவ்வாறு மேம்படுத்துவது தொடர்பாகவும் உணகங்களின் உரிமையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டது.

-இதே வேளை உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் மக்களுக்கு எவ்வாறு உணவு வகைகளை கையாண்டு பரிமாறுவது தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.




இதே வேளை உணவு வகைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலைகளை விட மேலதிகமாக பணம் அறவிடக்கூடாது எனவும் இனி வரும் காலங்களின் உணவு விலைக்கட்டப்பாடு மற்றும் உணவகம் மற்றும் உணவு வகைகளின் சுகாதார நடவடிக்கைகள் பரிசோதனை செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி ஞானசீலன் குனசீலன் மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் உணவகங்களில் சுகாதாரத்தை மேம்படுத்துதல் தொடர்பில் விழிர்ப்புனர்வு கருத்தரங்கு. Reviewed by NEWMANNAR on March 07, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.