கஞ்சா வைத்திருந்த மூவருக்கு அபராதத்துடன் சிறைத்தண்டனை
கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூவருக்கு தலா 5,000 ரூபா அபராதத்துடன், 3 மாத சிறைத்தண்டனை விதித்து மன்னார் மாவட்ட நீதவான் அந்தோனிப்பிள்ளை யூட்சன் தீர்ப்பளித்தார்.
மேலும், குறித்த நபர்கள் அபராதத் தொகையை செலுத்தத் தவறின், மேலும் ஒரு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி நேரிடும் எனவும் நீதவான் தெரிவித்தார்.
மன்னார் நகரின்வெவ்வேறு இடங்களிலும் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த மூவரையும் கடந்த செவ்வாய்க்கிழமை பொலிஸார் கைதுசெய்தனர்.
இந்த 3 பேரையும் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இவர்களுக்கு அபராதத்துடன், சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
கஞ்சா வைத்திருந்த மூவருக்கு அபராதத்துடன் சிறைத்தண்டனை
Reviewed by NEWMANNAR
on
March 09, 2013
Rating:

No comments:
Post a Comment