எலும்புத் துண்டுகளுக்காக வாலாட்டிக்கொண்டிருக்கும் தமது தலைமைகளுக்கு முதலில் நாய்ப்பட்டி அணிவிக்க வேண்டும்
தமது சுயநலனுக்காக சமூகத்தை காட்டிக்கொடுத்து அற்ப சலுகைகள் எனும் எலும்புத் துண்டுகளுக்காக வாலாட்டிக்கொண்டிருக்கும் தமது தலைமைகளுக்கு முதலில் நாய்ப்பட்டி அணிவிக்க வேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மாநகர சபை அமர்வுகளுக்கு கறுப்பு பட்டி அணிந்து வருவதை விட பதவிகளுக்கு வாலாட்டும் தமது தலைவர்களுக்கு முதலில் நாய்ப்பட்டி அணிவிப்பதற்கு இவர்கள் முன்வர வேண்டும்
அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்த நாட்டின் வரலாற்றில் என்றுமே கண்டிராத அளவு இனத்துவேசம் இந்த ஆட்சியில் பகிரங்கமாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் போது பூனைக்கு மணி கட்டுவது யார், எப்படி என்று தெரியாமல் முஸ்லிம் கட்சித் தலைமைகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. தங்களது சுய நல பதவிகளுக்கு ஆப்பு வந்து விடும் என்ற அச்சத்திலேயே இவர்கள் இவை பற்றி நாடாளுமன்றத்தில் பேசாமல் மூடிய அறைக்குள் இருந்து கொண்டு குசு குசுக்கின்றனர்.
முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் ஆபத்து பற்றி இவர்கள் பேசுவார்கள் என நம்பி இவர்களுக்கு வாக்களித்த முஸ்லிம் சமூகம் இன்று நாதியற்று தத்தளித்துக்கொண்டிருக்கும் அதே வேளை சமூகத்தக்காக தமது சுயநலன்களை வீசி விட்டு களத்தில் குதித்திருப்போரைக்கூட இனங்கண்டு அவர்களை ஆதரிக்கத்தெரியாத ஒரு சமூகமாகவும் முஸ்லிம் சமூகம் இருக்கிறது
முஸ்லிம்களின் பிரச்சினைக்கு ஒரு மாகாண சபை உறுப்பினர் கண்டன தீர்மானம் கொண்டு வருகிறார். இன்னொருவர் கறுப்பப்பட்டி அணிகிறார். கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஒருவரோ தமது தலைவர்களின் மௌனம் பாராட்டுக்குரியது என வெட்கமில்லாமல் வாலாட்டுகிறார். இவர்கள் இந்த அரசாங்கத்தின் வால்களாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு அறிக்கை விட்டதற்காக காவல்துறை மற்றும் இரகசிய காவல்துறை கெடுபிடிகளுக்கு நாம் முகம் கொடுக்கும் போது இத்தனை பகிரங்கமாக போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. பன்றியின் உருவத்தில் அல்லாஹ் என்ற அழகிய வார்த்தையை எழுதி அமவதிக்கப்படுகின்றன. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது நன்கு தெரிந்த நிலையிலும் இவற்றை நாடாளுமன்றத்தில் கண்டித்துப் பேசாமல் இவர்களின் சுயநலத்துக்காக வாலாட்டிக்கொண்டிருக்கின்றனர்.
தமது சுயநலனுக்காக சமூகத்தை காட்டிக்கொடுத்து அற்ப சலுகைகள் எனும் எலும்புத் துண்டுகளுக்காக வாலாட்டிக்கொண்டிருக்கும் தமது தலைமைகளுக்கு முதலில் நாய்ப்பட்டி அணிவிக்க வேண்டும் என்றார்.
எலும்புத் துண்டுகளுக்காக வாலாட்டிக்கொண்டிருக்கும் தமது தலைமைகளுக்கு முதலில் நாய்ப்பட்டி அணிவிக்க வேண்டும்
Reviewed by Admin
on
March 09, 2013
Rating:

No comments:
Post a Comment