வலம்புரி அலுவலக செய்தியாளர் மீது தாக்குதல்; விசாரணைகள் ஆரம்பம்
யாழ்ப்பாணத்தில் வலம்புரி பத்திரிகையின் அலுவலக செய்தியாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நீராவியடி கோவிலக்கு அருகில் வலம்புரி பத்திரிகையின் அலுவலக செய்தியளார் யூ.சாலின் மீது இனந்தெரியாத சிலர் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதேவேளை சுமார் ஆறு பேரைக்கொண்ட இனந்தெரியாத குழுவொன்றே தாக்குதல் நடத்தியிருப்பதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
தாக்குதலில் காயமடைந்த செய்தியாளர் யாழ். போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஸ்ரீபவானந்தராஜா குறிப்பிட்டார்.
வலம்புரி அலுவலக செய்தியாளர் மீது தாக்குதல்; விசாரணைகள் ஆரம்பம்
Reviewed by Admin
on
March 09, 2013
Rating:

No comments:
Post a Comment