எமது இலக்கை அடையும் வரை போராடுவோம்: பொது பல சேனா

ஹலால் விவகாரத்தில் நாங்கள் வெற்றிபெற்று விட்டோம். அடுத்தடுத்த விவகாரங்கள் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என பொது பல சேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார்.
எமது அடுத்த போராட்டம் இம்மாதம் 31ஆம் திகதி முன்னர் ஆரம்பமாகும். கண்டியில் எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறும் மாநாட்டில் விசேட அறிவிப்பொன்றை மேற்கொள்ளவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
"இது ஒரு பெளத்த நாடு. பெளத்தர்கள் ஹலால் உண்ணத் தேவையில்லை. அதேபோல . முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயாவிற்கு எதிராக விரைவில் போர்க்கொடி தூக்குவோம்" என கிரம விமலஜோதி தேரர் மேலும் தெரிவித்தார்.
எமது இலக்கை அடையும் வரை போராடுவோம்: பொது பல சேனா
Reviewed by Admin
on
March 12, 2013
Rating:

No comments:
Post a Comment