இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஊடாக ஒலிபரப்பு செய்யப்படும் பிபிசிஉலக சேவை நிகழ்ச்சிகள் இடைநிறுத்தம்

எமது நிகழ்ச்சியைத் தொடர்ந்து கேட்டுவரும் இலங்கை நேயர்களுக்கு எமது சேவை தரப்படுவதில் உள்ள இடைநிறுத்தம் குறித்து வருந்துகிறோம். ஆனால் எமது நிகழ்ச்சிகளைக் குறிவைத்து இவ்வாறான இடையூறு விளைவிப்பது அந்த நேயர்கள் எம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் கடுமையாக மீறுவதான ஒரு செயல், இதை பிபிசி அனுமதிக்க முடியாது. இந்த நிகழ்ச்சி தடங்கல்கள் கடந்த வாரம் மார்ச் 16 முதல் 18 வரை நடந்த போது இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்துடன் கதைத்து அவர்கள் எம்முடனான ஒப்பந்ததை இது மீறும் செயல் என எச்சரித்தோம். எனினும் மார்ச் 25ம் திகதியும் மற்றுமொரு தடங்கல் நடந்ததால் இந்த சேவையை உடனடியாக இடைநிறுத்துவதைத் தவிர பிபிசிக்கு வேறு வழி இல்லாமல் போய்விட்டது. பிபிசி நிகழ்ச்சிகள் தொடர்பாக எதேனும் முறைப்பாடுகள் இருந்தால் அவற்றை நேரடியாக எமக்குக் கொண்டுவருமாறும், ஏற்றுக்கொள்ளபடமுடியாத அளவிற்கு ஒலிபரப்பில் நேரடியாக இடையூறு விளைவிப்பது மற்றும் எமது நேயர்களை ஏமாற்றுவதைத் தவிர்க்குமாறும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தைக் கேட்டிருந்தோம்”, என பீட்டர் ஹரோக்ஸ் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
இது போன்ற ஒரு முடிவை பிபிசி நிறுவனம் 2009ஆம் ஆண்டில் அதன் சேவைகள் இடையூறுபடுத்தப் பட்டபோது எடுத்திருந்தது. இலங்கை நேயர்கள் பிபிசி சேவைகளை சிற்றலை வரிசைகள் மூலமாகவும், இணையத் தளம் மூலமாகவும் கேட்கலாம்
பிபிசி தமிழ்
25 மீட்டர் அலைவரிசை 11965 கிலோஹெர்ட்ஸ்
31 மீட்டர் அலைவரிசை 9855 கிலோஹெர்ட்ஸ்
49 மீட்டர் அலைவரிசை 6135 கிலோஹெர்ட்ஸ்
41 மீட்டர் அலைவரிசை 7600 கிலோஹெர்ட்ஸ்
·
பிபிசி சிங்களம்
49 மீட்டர் அலைவரிசை 6135 கிலோஹெர்ட்ஸ்
31 மீட்டர் அலைவரிசை 9615 கிலோஹெர்ட்ஸ்
41 மீட்டர் அலைவரிசை 7699 கிலோஹெர்ட்ஸ்
பிபிசி உலக சேவை ஆங்கில உள்ளடக்கம் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனதில் புஆவு நேரப்படி - 0300 முதல் 0430, 1130 முதல் 1230, 1330 முதல் 1430 ஒலிபரப்பப்படும்.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஊடாக ஒலிபரப்பு செய்யப்படும் பிபிசிஉலக சேவை நிகழ்ச்சிகள் இடைநிறுத்தம்
Reviewed by Admin
on
March 27, 2013
Rating:

No comments:
Post a Comment