சிவராத்திரி தினத்தன்று விசேட பூசை வழிபாடுகள் திருக்கேதீச்சரம் ஆலயத்தில்-களியாட்டத்தை தவிருங்கள்; இந்து மா மன்றம் கோரிக்கை
மகா சிவராத்திரியான நாளை ஞாயிற்றுக்கிழமை சகல இந்து ஆலயங்களிலும் சமய முறைப்படி வழிபாடுகள் நடத்தப்பட வேண்டும். தேவையற்ற களியாட்ட நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்று அகில இலங்கை இந்துமா மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இந்துமா மன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மகா சிவராத்திரியை வர்த்தக விடுமுறையாக பிரகடனப்படுத்துமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் அது இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை.
எனினும் அன்றைய தினம் சகல இந்து மக்களும் சமய வழிபாடுகளில் ஈடுபடக்கூடிய வகையில் தொழில் நிறுவனங்களில் விடுமுறை வழங்கப்படுவதுடன் மதுபான சாலைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சிவராத்திரி தினத்தன்று விசேட பூசை வழிபாடுகள் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இடம்பெறவுள்ளன. அத்துடன் இந்துமா மன்றத்தின் காலாண்டு இதழாகிய "இந்து ஒளி'' வெளியிட்டு வைக்கப்படவுள்ளது என்றுள்ளது.
மகா சிவராத்திரியை வர்த்தக விடுமுறையாக பிரகடணப்படுத்துமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
சிவராத்திரி தினத்தன்று விசேட பூசை வழிபாடுகள் திருக்கேதீச்சரம் ஆலயத்தில்-களியாட்டத்தை தவிருங்கள்; இந்து மா மன்றம் கோரிக்கை
Reviewed by Admin
on
March 09, 2013
Rating:

No comments:
Post a Comment