தரச் சான்றிதழ் தொடர்பில் பரிசீலனை செய்ய நடவடிக்கை
தரச் சான்றிதழ் வழங்கும் முறைமை சான்றிதழ் வழங்கியதன் பின்னர் பின்பற்றும் முறைமை தொடர்பில் இதன்போது ஆராயவுள்ளதாக அவர் கூறினார். குறிப்பாக ஐ.எஸ்.ஓ மற்றும் மருத்துவ இரசாயனச் சான்றிதழ் போன்றன தொடர்பிலும் இதன்போது பரிசீலிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தரச் சான்றிதழ் மக்களுக்கு மிகவும் முக்கியமானது என்பதால் நிறுவனங்கள் சான்றிதழைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் அது தொடர்பில் கையாலும் விடயங்கள் தொடர்பில் ஆராய வேண்டியுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் பொறுப்புக் கூற வேண்டியுள்ளமையினால் இதுகுறித்து ஆராய்ந்து தமது வருடாந்த அறிக்கையில் இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தரச் சான்றிதழ் தொடர்பில் பரிசீலனை செய்ய நடவடிக்கை
Reviewed by Admin
on
April 14, 2013
Rating:

No comments:
Post a Comment