அரசியல் பிரதிநிகள் தமது வாக்குறுதிகளை நிறை வேற்றுகின்றார்களா என்பது குறித்து கருத்தரங்கு.(படங்கள் )
மக்களின் வாக்களிப்பில் தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்பட்ட அரசியல்
பிரதிநிதிகள் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்றார்களா என்பதனை பிரஜைகளுக்கு தெழிவு படுத்தும் முகமாக மன்னார் சர்வோதைய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் மாவட்ட சர்வோதைய அமைப்பில் இடம் பெற்றதாக சர்வோதைய அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் சிறினிவாசன் யுகேந்திரா தெரிவித்தார்.
-தேர்தலின் போது மக்களின் வாக்களிப்பில் தெரிவு செய்யப்பட்ட மக்களின் பிரதி நிதிகள் தமது தேர்தல் காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறை வேற்றுகின்றார்களா,இல்லையா என்பதனை கண்காணிக்கும் ஆற்றலை மாவட்டத்தில் உள்ள மிகைத்திரன் மிக்க பிரஜைகளுக்கு தெழிவு படுத்தும் முகமாக குறித்த கருத்தரங்கு அமைந்திருந்தது.
-குறித்த கருத்தரங்கிற்கு மன்னார் மற்றும் நானாட்டான் ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் இருந்தும் கிராமமட்ட தலைவர்கள் 50 பேர் கலந்து கொண்டனர்.
அரசியல் பிரதிநிகள் தமது வாக்குறுதிகளை நிறை வேற்றுகின்றார்களா என்பது குறித்து கருத்தரங்கு.(படங்கள் )
Reviewed by NEWMANNAR
on
April 08, 2013
Rating:
No comments:
Post a Comment