14ஆம் திகதி மடுவுக்கு ரயிலில் போகலாம்
மடு தேவாலய வருடாந்தத் திருவிழா ஆரம்பமாகவுள்ளதால் அங்கு செல்லவுள்ள பக்தர்களின் நன்மை கருதி மதவாச்சியிலிருந்து மடு வரையான சுமார் 106 கிலோ மீற்றர் நீளமான தலைமன்னார் ரயில் பாதை துரித கதியில் புனரமைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் நிதியுதவியில் மேற்கொள்ளப்படுகின்ற இந்த ரயில் பாதை புனரமைப்பு பணிகளில் முதற்கட்டம் தற்போது பூர்த்தியாகியுள்ள நிலையில் அடுத்த கட்ட புனரமைப்புப் பணிகள் ஓரிரு தினங்களில் முடிக்கப்படுமென ரயில்வே திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்ட பணிகளுக்கு மட்டும் சுமார் 81 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. ரயில் பாதை புனரமைப்பு பணிகள் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
14ஆம் திகதி மடுவுக்கு ரயிலில் போகலாம்
Reviewed by Admin
on
May 10, 2013
Rating:

No comments:
Post a Comment