இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தால் 15 லட்சம் அபராதம்!- மீன்பிடித்துறை அமைச்சு
இது தொடர்பான புதிய சட்டங்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இவ்வாறு அபராதம் விதிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் இதற்காக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளது. வேறு நாட்டு கடற்பரப்பிற்குள் மீன்பிடியில் ஈடுபட்டு கைது செய்யப்படும் இலங்கை மீனவர்களுக்கு இலங்கையில் பதினைந்து லட்ச ரூபா அபராதம் விதிக்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.
இதேவேளை, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதனால் இலங்கை மீன் உற்பத்திகளை இறக்குமதி செய்வது தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டியுள்ளதாக அண்மையில் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தால் 15 லட்சம் அபராதம்!- மீன்பிடித்துறை அமைச்சு
Reviewed by Admin
on
May 04, 2013
Rating:

No comments:
Post a Comment