அண்மைய செய்திகள்

recent
-

பன்மைத்துவத்தின் பெறுமதியை உணராதவர்கள் மனநோயாளிகளே!


இலங்கை பல்லின, பல்மத, பல்சமயங்களைக் கொண்ட ஒரு நாடு. இதையே 'பன்மைத்துவம்' அல்லது 'பன்முகத்தன்மை' என்று சொல்கிறோம். எல்லாமே ஒரே மாதிரியாக இருந்தால் அது அழகாக இருக்காது. 'ஏயசநைவல அயமநள டீநயரவகைரட' என்று சொல்வார்கள். அதாவது 'வித்தியாசமானவை, வௌ;வேறானவை எப்போதும் அழகானவை.'  இந்தப் பன்முகத்தன்மையின் அழகை, பெறுமதியை உணராதவர்கள், மதிக்கத்தெரியாதவர்கள் உண்மையில் மனநோயாளிகளே என அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் குறிப்பிட்டார்.



அண்மையில் (11.05.2013) கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள சிறிலங்கா இஸ்லாமிய நிலையத்தில் இடம்பெற்ற மனிதத்துவம் தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


 அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, உலகின் சகல நாடுகளிலும் பல்வேறுபட்ட மதங்களைப் பின்பற்றுபவர்கள், பல்வேறுபட்ட கொள்கைகளை உடையவர்கள், பல்வேறுபட்ட மனோபாவங்களைக் கொண்டவர்கள், வௌ;வேறு விதமான கலாசாரங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்கின்றனர். இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல. இலங்கையின் புவிப்பரப்பளவு சிறியதாயினும் இங்கும் பல இன, மத, சாதி, பிரதேச, கொள்கை கொண்டவர்கள் வாழ்கின்றனர். இந்தப் பன்முகத்தன்மையை  ஏற்றுக்கொள்ளாதவர்களால்தான் கடந்த காலத்தில் இந்த நாட்டில் பல மோதல்கள் ஏற்பட்டன.

இவர்களின் அண்மைக்கால செயற்பாடுகள், கருத்துக்கள் மேலும் பல இன, மத மோதல்களுக்கு வழிகோலப்போகின்றன.
 தீய எண்ணங்களை உடையவன் தான் வாழும் சமூகத்திற்கு ஒரு நோய்க்கிருமியாகவே இருக்கின்றான். நாம் எந்த மதத்தை, எந்த இனத்தை, எந்தக் கொள்கையை சேர்ந்தவராகவும் இருக்கலாம். நாம் எப்போதுமே மற்றவர்கள் மட்டில் சந்தேகத்தையம், ஆத்திரத்தையும், பொறாமையையம் கொண்டிருந்தால் நாம் குணப்படுத்தமுடியாத ஒரு தீவிர நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றோம் என்பதே அதன் பொருளாகும்.

 நமது உடலுக்கு ஏற்படும் நோயினால் அதிகம் பாதிப்பும் நஸ்டமும் ஏற்படுவது நமக்குத்தான், பிறருக்கு அல்ல,  ஆனால் உள ரீதியாக நமக்கு ஏற்படும் நோய் காரணமாக நம்மைவிட நம்மைச் சூழ உள்ளவர்களே அதிகம் பாதிப்படைவார்கள். அதாவது தீய எண்ணங்களை உடையவன் தான் வாhழும் சமூகத்திற்கு ஒரு நோய்க்கிருமியாவான்.

 நற்குணமுள்ள ஒருவர் ஆரோக்கியமும் சக்தியும் உள்ள ஒருவருக்கு ஒப்பாவார். அவரால் அவருக்கு ஏற்படும் நன்மையைவிட அதிக நன்மை அவருடைய சமூகத்திற்கே ஏற்படுகின்றது. அவர் அந்த சமூகத்திற்கு ஒரு 'கொடையாக', 'அருளாக' விளங்குவார்.

படங்கள் :
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மௌலவி அஸ்மின் மற்றும் தமிழ் நேசன் அடிகளார். மற்றும் கலந்துகொண்டவர்களில் ஒரு பகுதியினர்.




பன்மைத்துவத்தின் பெறுமதியை உணராதவர்கள் மனநோயாளிகளே! Reviewed by Admin on May 21, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.