அடம்பன் பகுதியில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு விளக்கமறியல் உத்தரவு.
மன்னார் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று முந்தினம் வியாழக்கிழமை இரவு அடம்பன் பகுதிக்குச் சென்று அங்குள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிராம் 680 மில்லி நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளை கைப்பற்றியதோடு சந்தேக நபரையும் கைது செய்து விடத்தல் தீவு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
விடத்தல் தீவு பொலிஸார் விசாரணைகளின் பின் நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது குறித்த நபரை எதிர்வரும் 14 தினங்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
அடம்பன் பகுதியில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு விளக்கமறியல் உத்தரவு.
Reviewed by Admin
on
May 25, 2013
Rating:

No comments:
Post a Comment