மன்/நானாட்டான் மகாவித்தியாலய புதிய மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா.
இதன் போது அதே தினத்தன்று பழைய மாணவத்தலைவர்களுக்கு பாராட்டு விழா,புதிய உயர்தர வகுப்பு ஆரம்பித்தல், ஆசிரியர்களின் பாதுகாவலரும் டிலாசால் அருட்சகோதரர்களின் ஸ்தாபகரும் ஆகிய புனித ஜோண் பப்ரிஸ்ட் டிலாசால் அவர்களின் விழாவும் பாடசாலையில் கொண்டாடப்பட்டது.
காலை 7.45 மணிக்கு திருப்பலியினைத் தொடர்ந்து 10.00 மணியளவில் கலை நிகழ்வுகளும் நடைபெற்றது. தொடர்ந்து 1.30 மணியளவில் மதிய உணவுடன் இந் நிகழ்வு நிறைவுற்றது.
இந் நிகழ்விற்கு இலங்கை டிலாசால் அருட்சகோதரர்களின் தலைவர் அருட்சகோதரர்.டென்சில் பெரேரா அவர்களும், பிரதம விருந்தினராக முருங்கன் வைத்திய அதிகாரி திரு.சாள்ஸ் ஒஸ்மன் அவர்களும் அழைக்கப்பட்டிருந்தார்
இதைவிட சமயத் தலைவர்களும், மாணவத் தலைவர்களின் பெற்றோர்களும், பாடசாலை அபிவிருத்தி சங்க, மேம்பாட்டுக்குழு, பழைய மாணவர்சங்க பிரதி நிதிகளும், ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
 மன்/நானாட்டான் மகாவித்தியாலய புதிய மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா.
 
        Reviewed by Admin
        on 
        
May 26, 2013
 
        Rating: 
      
 
        Reviewed by Admin
        on 
        
May 26, 2013
 
        Rating: 







No comments:
Post a Comment