MPL கிரிக்கெட் முதலாவது போட்டியில் நடப்பு சம்பியனை வீழ்த்தியது ஸ்டார் ஈகிள்
25 போட்டிகளைக் கொண்ட சுற்றுப்போட்டியின் முதலாவது போட்டியானது காலை 9.30 மணியளவில் போட்டியை நடாத்தும் பெரியகடை ஸ்டார் ஈகிள் அணிக்கும் நடப்பு சம்பியன் சென்.விக்டரிஸ் அணிக்கும் இடையில் நடைபெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்டார் ஈகிள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 09 இலக்குகளை இழந்து 158 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் ஸ்டார் ஈகிள் அணிசார்பாக அதிகபட்ச ஓட்டங்களாக ஜக்சன் 40(33) ஓட்டங்களையும், மயூரன் 37(29) ஓட்டங்களையும் றோய் 20(12) ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் சென்.விக்டரிஸ் அணிசார்பாக செல்வராஜ் 04 ஓவர்கள் பந்துவீசி 21 ஓட்டங்களை கெடுத்து 03 இலக்குகளையும், டேமியன் மற்றும் மெர்லின் தலா இரண்டு இலக்குகளையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்.விக்டரிஸ் அணியினர் 20 ஓவர்களில் 09 இலக்குகளை இழந்து 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர்.
இதில் சென்.விக்டரிஸ் அணிசார்பாக துடுப்பாட்டத்தில் அதிகபட்ச ஓட்டங்களாக செல்வராஜ் 52(45) ஓட்டங்களையும் மொறிசன் 17(16) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்டார் ஈகிள் அணி சார்பாக அருன் 04 ஓவர்கள் பந்து வீசி 15 ஓட்டங்களுக்கு 03 இலக்குகளையும் பிரியகாந்த் 04 ஓவர்கள் பந்துவீசி 35 ஓட்டங்களுக்கு 03 இலக்குகளையும் கைப்பற்றினார்கள்.
லீக் சுற்றின் இரண்டாவது போட்டி:
கிறீன் பீல்ட் அணியை வீழ்த்தியது சென்.ஜோசப்
கடந்த சனிக்கிழமை மாலை 2.00 மணிக்கு ஆரம்பமான இரண்டாவது போட்டியில் சென்.ஜோசப் அணியும் கிறீன் பீல்ட் அணியும் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சென்ஜோசப் அணியினர் 20 ஓவர்களில் 06 இலக்குகளை இழந்து 176 ஓட்டங்களை பெற்றனர். துடுப்பாட்டத்தில் சென்.ஜோசப் அணிசார்பாக அதிகபட்ச ஓட்டங்களாக முருகா 68(51) ஓட்டங்களையும், அன்ரன் 16(12) ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் கிறீன் பீல்ட் அணிசார்பாக றிச்சேட் 04 ஓவர்கள் பந்து வீசி 29 ஓட்டங்களுக்கு 02 இலக்குகளையும் பிரதீப், ஹரிபவன், நார்தீபன், ரூபன் ஆகியோர் தலா ஒவ்வொரு இலக்குகளையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிறீன் பீல்ட் அணியினர் 11.2 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 89 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தனர்.
துடுப்பாட்டத்தில் கிறீன்பீல்ட் அணிசர்பாக அதிகபட்ச ஓட்டங்களாக கவிராஜ் 12(17) ஓட்டங்களையும் ஜொனா 12(09) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சென்.ஜோசப் அணிசார்பாக அருள் 03 ஓவர்கள் பந்துவீசி 20 ஓட்டங்களுக்கு 03 இலக்குகளையும் சொய்சா 2.2 ஓவர்கள் பந்துவீசி 22 ஓட்டங்களுக்கு 03 இலக்குகளையும் கைப்பற்றினர்.
MPL கிரிக்கெட் முதலாவது போட்டியில் நடப்பு சம்பியனை வீழ்த்தியது ஸ்டார் ஈகிள்
Reviewed by Admin
on
May 13, 2013
Rating:

No comments:
Post a Comment