தமிழ்க்கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இன்று மன்னாரில் கூடுகின்றன
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தலைமையில் ஞானோதய மண்டபத்தில் காலை 10 மணிக்கு இடம்பெறும் இக்கூட்டத்துக்கு கூட்டமைப்பில் உள்ளடங்கும் தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட், ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைவர்கள் அனைவரும் சமுகமளிக்கவுள்ளனர்.
இவர்கள் அனைவருக்குமான அழைப்பை சிவில் அமைப்புக்களின் இணைப்பாளர் கு. குருபரன் விடுத்துள்ளார். இக்கலந்துரையாடல் மன்னார், வவுனியா, திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ். மட்டக்களப்பு, அம்பாறை, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிவில் அமைப்புக்களும் ஏனைய பிரமுகர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்தார்.
தமிழ்க்கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இன்று மன்னாரில் கூடுகின்றன
Reviewed by NEWMANNAR
on
May 11, 2013
Rating:

No comments:
Post a Comment