அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவுக்கு தாமதமாக கிடைக்கும் கடிதங்கள்

வவுனியா பிரதம தபாலகத்திலிருந்து எடுத்துச் செல்லப்படும் கடிதங்கள் உரிய வகையில் பொதுமக்களை சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


 வவுனியா பிரதம தபாலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்படும் கடிதங்கள் குறைந்தது ஒருநாளுக்குள் குறிப்பிட்ட முகவரி உடைய நபருக்கு கிடைத்துவிட வேண்டும். மாறாக மூன்று, நான்கு தினங்களின் பின்னர் கிடைப்பதாகவும் சில கடிதங்கள் தமக்கு வந்து சேராது இருப்பதாகவும் வேப்பங்குளம், குட்செட்வீதி, முருகனூர், நெளுக்குளம் பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

 இவ்வாறு தமக்கு கிடைக்காத கடிதங்களுக்குள் பல்வேறு முக்கியமான கூட்டக் கடிதங்கள் உட்படுவதாக அந்தப் பகுதி மக்களால் மேலும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து வவுனியா தபாலக வட்டாரங்களுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது கடிதம் காலதாமதமாகக் கிடைப்பது குறித்து பொதுமக்களின் முறைப்பாடுகள் நேரடியாக தமக்கு கிடைக்கவில்லை எனவும் உரிய வகையில் முறைப்பாடுகள் தலைமை அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு வரப்படும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கின்றனர்.

 வவுனியா பிரதம தபாலகத்தில் இருந்து எடுத்து செல்லப்படும் கடிதங்கள் குறைந்தது ஒருநாளுக்குள் குறிப்பிட்ட முகவரி உடைய நபருக்கு கிடைத்துவிட வேண்டும்.
வவுனியாவுக்கு தாமதமாக கிடைக்கும் கடிதங்கள் Reviewed by Admin on May 08, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.