61-180 அலகுகள் வரை எரிபொருள் சீராக்கல் கட்டணம் 25% குறைப்பு
அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மின் சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது, இதன்படி, முதல் 60 அலகுகளுக் கான மின் கட்டணம் உயர்த்தப்படாது எனவும் 61 அலகுகளில் இருந்து 180 அலகுகள் வரையான அலகுகளுக்காக அறவிடும் எரிபொருள் சீராக்கல் கட்டணம் 25 வீதத்தினால் குறைக்கப்படும் எனவும் மின் சக்தி எரிசக்தி அமைச்சின் செயலாளர் எம்.எம். சீ. பேர்டிணன்டஸ் தெரிவித்தார்.
இது தவிர, 60 அலகுகளில் இருந்து 66 அலகுகள் வரையில் 60 அலகுகளுக் கான கட்டணமும், 91 அலகுகளில் இருந்து 96 அலகுகள் வரையில் 90 அலகுகளுக்கான கட்டண மும், 121 அலகுகளில் இருந்து 126 அலகுகள் வரை 120 அலகுகளுக்கு அறவிடும் கட்டணம் அறவிடவும் தீர்மானிக் கப்பட்டுள்ளது. மின்சார சபைக்கு ஏற்பட்டு வரும் பாரிய நிதி நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் வகையில் ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மின் கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபை தீர்மானித்திருந்தது.
இதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், மேற்படி கட்டண உயர்வுக்கு எதிராக அரசியல் கட்சிகள், அமைப்புகள் பொதுமக்கள் ஆகியோர் குரல் கொடுத்து வந்தன. இது தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த மே தின விழாவில் மின்கட்டணங் களை குறைப்பதாக அறிவித்தார்.
ஜனாதிபதியின் அறி வித்தலுக்கமைய மின் கட்டணங்களை திருத்த மின்சக்தி எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பாக திறை சேரி அடங்கலாள பலதரப்புடன் நேற்று ஆராயப்பட்டது. இதன்படியே, புதிய திருத்தங்கள் செய்ய மின்சக்தி எரிசக்தி அமைச்சு உத்தேசித்துள்ளது. மின்சார சபையின் புதிய மின்கட்டண அளவீடு தமக்கு நேற்று மாலை வரை கிடைக்கவில்லை எனவும் அது கிடைத்ததும் அது குறித்து ஆராய்ந்து தேவையான அனுமதியை வழங்குவதாக பொதுக் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்தது.
ஏற்கனவே, முதல் 30 அலகுகளுக்காக 3 ரூபா அறவிடப்பட்டதோடு இதனை 5 ரூபாவாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. 60 வரையான அலகுகளுக்கு அறவிடப் பட்ட 4 ரூபா 70 சதம் 6.00 ரூபாவாக உயர்த்தவும் 90 அலகுகள் வரை அற விடப்பட்ட 7 ரூபா 50 சதம் கட்டணம் 8 ரூபா 50 சதமாகவும் உயர்த்த
உத் தேசிக்கப்பட்டிருந்தது.
தற்போது 61 அலகுகளில் இருந்து 180 அலகுகள் வரை 40 வீத எரிபொ ருள் சீராக்கல் கட்டணம் அறவிடப் படுகிறது. பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதி கிடை த்த பின் புதிய கட்டண மாற்றம் மே 20 முதல் அமுல்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது.
61-180 அலகுகள் வரை எரிபொருள் சீராக்கல் கட்டணம் 25% குறைப்பு
Reviewed by Admin
on
May 03, 2013
Rating:

No comments:
Post a Comment