மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தில் மோதல்-4 பேர் கைது
மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம் பெற்ற மோதல் சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் ஒருவர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேரை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் பஸார் பகுதியில் மணிக்கடை வைத்துள்ள இளைஞர் ஒருவர் சற்று தொலைவில் உள்ள மரக்கறி விற்பனை நிலையம் ஒன்றிற்கு சென்று மரக்கறி வகைகளை கொள்வனவு செய்துள்ளார்.
அவற்றை தனது கடைக்கு கொண்டு சென்று பார்த்த போது அவை பழுதடைந்த நிலையில் பாவனைக்கு உதவாததாக காணப்பட்டுள்ளமையினால் அதனை மாற்றி எடுக்க மீண்டும் குறித்த மரக்கறி விற்பனை நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
இதன் போது குறித்த இளைஞருக்கும் மரக்கறி விற்பனை நிலைய உரிமையாளருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் அது கைகலப்பாக மாறியது.
இதன் போது குறித்த இளைஞர் மீது மரக்கறி விற்பனை நிலைய உரிமையாளரும் சில இளைஞர்களும் இணைந்து தாக்கிய போது குறித்த இளைஞர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
காயத்திற்குள்ளான இளைஞர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார் மரக்கறி விற்பனை நிலைய உரிமையாளர் உற்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Reviewed by NEWMANNAR
on
May 27, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment