மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.-றிஸாட்
மன்னார் மாவட்டம் யுத்தத்தினால் பாரிய கஸ்டத்தையும்,நஸ்டத்தையும்,துன்பத்தையும் அனுபவித்த ஒரு மாவட்டமாக காணப்படுகின்றது.மாணவ சமூகமாக இருந்தால் என்ன? மக்களாக இருந்தால் என்ன? விளையாட்டு வீரர்களாக இருந்தால் என்ன? யுத்தத்தினால் மூன்று தசாப்பதங்களாக பாரிய அழிவுகளையும்,பாரிய இழப்புக்களையும்,பாரிய பின்னடைவுகளையும் நாங்கள் அடைந்திருக்கின்றோம்.என அமைச்சர் றிஸாட் பதீயுதீன் தெரிவித்தார்.
மன்னாரில் முதல் தடவையாக தேசியமட்ட உதைப்பந்தாட்டப்போட்டி நேற்று சனிக்கிழமை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் அரம்பமானது.இதன் போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் றிஸாட் பதியூதீன் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,
இந்த நாட்டிலே நாங்கள் கடந்த நான்கு வருடங்களாக அனுபவித்து வருகின்ற சமாதான சூழல் இன்று இவ்வாறான விளையாட்டுப்போட்டிகளை நடாத்துவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை தந்திருக்கின்றது.
இந்த நாட்டின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்ற பின் இந்த சமாதானத்தை எல்லோரும் அனுபவிக்கக்கூடிய வகையிலான சூழலை ஏற்படுத்தித்தந்துள்ளார்.
இந்த நாட்டில் உள்ள 25 மாவட்டமும் 330 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இன்று சமாதான காற்றை அனுபவிக்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தான் இவ்வாறான ஒரு தேசிய போட்டியை மன்னாரில் நடாத்துவதற்கான சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது.அந்த வகையிலே நாங்கள் மிகவும் சந்தோசப்படுகின்றோம்.இந்த சமாதானத்தையும்,அதனை நாங்கள் சுவாசிக்கின்ற சமாதான காற்றை பாதுகாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்
எங்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றது.எமது தேவைகள் நிறைவேறவில்லை.எங்களுடைய எதிர்பார்ப்புக்கள் இன்னும் நிறைவேறவில்லை.ஆனால் அவற்றை அடைவதற்கான சரியான பாதையிலே பயணிக்க வேண்டிய தேவைப்பாடு எமக்கு இருக்கின்றது.
கடந்த 30 வருடங்களாக நாங்கள் பயணித்த பாதையினால் அடைந்திருக்கின்ற அடைவுகள் என்ன?இன்று இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானத்திற்கு பின் நாங்கள் அடைந்திருக்கின்ற அடைவுகள் என்ன? எதிர்காலத்தில் நாங்கள் எவ்வாறான பாதையிலே பயணிப்பதன் மூலம் நாங்கள் எங்களுக்குரி யதை அடைந்து கொள்ளலாமா? என்பதனை புரிந்து கொள்ள வேண்டிய தார்மீக பொறுப்பு எமக்குள்ளது.இந்த மாவட்டத்தில் கத்தோலிக்க மக்கள் அதிகமாக வாழுகின்ற,இந்துக்களும்,இஸ்லாமியர்களும் சேர்ந்து வாழ்கின்ற ஒரு மாவட்டமாக உள்ளது.
நாங்கள் தூய்மையாக வாழ்ந்த மாவட்டம்.ஒற்றுமையாக வாழவேண்டிய மாவட்டம்.நாங்கள் இந்த மாவட்டத்திற்கு எல்லாவகையான அபிவிருத்தியையும்,பொருளாதார நீதியான முன்னேற்றம்,கல்வி ரீதியான முன்னேற்றம்,விளையாட்டு ரீதியான முன்னேற்றம், விவசாயிகள்,மீனவர்களுக்கான முன்னேற்றத்துக்கான பாதைகளை திறந்து நடக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.
இந்த மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்,இந்த மாவட்டத்தில் பிறந்தவன் என்ற வகையிலே இந்த மாவட்டத்தை எல்லாத்துறைகளிலும் உயர்த்த வேண்டும் என்று இரவு பகலாக பாடுபடுகின்றோம்.
அதற்கு இந்த மாவட்டத்தில் வாழ்கின்ற எல்லா இன மக்களும்,எல்லா அரசியல் தலைமைகளும்,அரசியல் கட்சிகள் சார்ந்தவர்களும்,எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும், ஒன்று சேர்ந்து இந்த நல்ல நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புத்தர வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். கிடைக்கின்ற நல்ல சந்தர்ப்பத்தை தவர விடக்கூடாது என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்.என அமைச்சர் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.-றிஸாட்
Reviewed by NEWMANNAR
on
May 19, 2013
Rating:
No comments:
Post a Comment