13 ஆண்டுகளின் பின்னர் மீள் ஆரம்பமான பாடசாலை
இந்தப் பாடசாலையை பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், பிரதேச செயலர் எஸ். சத்தியசீலன், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனையின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் சி. இதயராஜா ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர். 26.03.2000 ஆண்டு காலப்பகுதியில் முகமாலைப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட கடுமையான மோதல்களை அடுத்து இந்தப் பகுதியிலிருந்த மக்கள் முழுமையாகவே இடம் பெயர்ந்திருந்தனர்.
இதனையடுத்து, இங்கிருந்த பாடசாலையும் தாக்குதலில் சிக்கி முழுமையாக அழிந்து விட்டது. பின்னர் நீண்ட காலமாக முகமாலைப் பிரதேசம் இருதரப்புக்கும் இடையிலான மோதல் பிரதேசமாகவும் சூனியப் பிரதேசமாகவும் இருந்தது. தற்போது கண்ணிவெடிகள் அதிகமுள்ள பிரதேசமாக காணப்படுகிறது. இந்த நிலையில் கண்ணி வெடி அகற்றப்பட்டு மீள் குடியேற்றம் செய்யப்பட்ட முகமாலையின் வடபகுதியிலுள்ள போந்தர்குடியிருப்பு என்ற இடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கொட்டகையில் முகமாலை றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் மீள ஆரம்பமாகியுள்ளது.
பாடசாலையின் சொந்தக் காணி இன்னும் கண்ணிவெடி அகற்றப்படாத பிரதேசமாக உள்ளதால், அங்கே கண்ணி வெடிகள் அகற்றப்படும்வரையில் இந்தத் தற்காலிக அமைவிடத்திலேயே பாடசாலை இயங்கும் என பிரதிக் கல்விப்பணிப்பாளர் தெரிவித்தார்.
இந்தப் பாடசாலையில் 28 மாணவர்கள் இன்று சேர்த்துக் கொள்ளப்பட்டனர். மேலதிக மாணவர்கள் தொடர்ந்து சேர்த்துக் கொள்ளப்படுவர் என பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.
13 ஆண்டுகளின் பின்னர் மீள் ஆரம்பமான பாடசாலை
Reviewed by Admin
on
May 01, 2013
Rating:
No comments:
Post a Comment